Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நேற்று மாவோயிஸ்டுகளிடம் பேசத் தயார் – இன்று தோழர் மகாட்டோவைக் கொலை செய்து விட்டார்கள்.

இந்தியாவில் இதுவரை இருந்த பிரதமர்களிலேயே படு மட்டமான அமெரிக்க அடிவருடி மன்மோகனைப் போல் யாருமில்லை. அடிப்படையில் அரசியல்வாதியல்லாத இந்த மனிதர் அதிகாரியாக இருந்து அமெரிக்காவால் அரசியலுக்குள் நுழைக்கப்பட்டவர். மக்கள் விரோத நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் வல்லவர். மக்களை ஈவிரக்கமின்றி வேட்டையாடி போராட்டங்களை நசுக்குவதில் வல்லவர். ஆனால் இவருக்கு அமைதியானவர். பரமசாது, அஹிம்சைவாதி என்றெல்லாம் அடை மொழி உண்டு. இதுதான் மன்மோகன். நேற்று டில்லியில் நடந்த மாநில காவல்துறைத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மன்மோகன். ’’ நக்ஸலைட்கள் வன்முறையை முதலில் கைவிட வேண்டும். நக்ஸலைட்களும் நமது நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அரசு உணர்ந்துள்ளது. அதனால் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண அரசு முயற்சிக்கிறது. அரசு தனது நிலையிலிருந்து இறங்கி வரும்போது, நக்ஸலைட்களும் வன்முறையைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். நக்ஸலைட் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்துகிறது. இவற்றில் பெரும்பாலானவை பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளாகும். வன்முறை பாதித்த பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். எனவே இங்கு தங்கியிருக்கும் காவல்துறையினருக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. ” என்று பேசினார் மன்மோகன் பேசினார் இவரது பேச்சில் மிக முக்கியமாக போலீசாருக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்கிறார். பதவி உயர்வுக்காக வகை தொகையில்லாத என்கவுண்டர்களை நடத்திய பல காவல்துறை அதிகாரிகள் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் போது. அதே பதவி உயர்வைக் காட்டி என்கவுண்டரை ஊக்கப்படுத்தியிருக்கிறார்.

மன்மோகன் விளைவு. பேசி பத்து மணி நேரம் கூட ஆகவில்லை மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கியத் தலைவரும் லால்கர் இயக்கத்த்தை தலைமை தாங்கியவருமான உமகாண்டோ மகோட்டாவைக் (Umakanto Mahato) சுட்டுக் கொன்று விட்டார்கள். போலீஸ் வன்முறைக்கு எதிரான மக்கள் கமிட்டியின் ( PCAPA ) வின் தலைவரான மகோட்டாவை ஜாஹார்கரன் காட்டுப்பகுதியில் வைத்து சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள். ஆனால் ஜார்ஹரன் பகுதி போலீஸ் மா அதிபர் பிரவீன் திருப்பதியோ ஐந்து மணி நேர துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் மகோட்டாவைக் கொன்றதாகவும் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்படுவதற்காக மகோட்டாவின் உடலை வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறது. சென்ற மாதம் சிதம்பரம் விடுத்த சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பான ஆலோசனைக்காகச் சென்ற தோழர் ஆசாத்தை நாக்பூரில் பிடித்து அடிலாபாத் காட்டிற்குக் கொண்டு சென்று சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது. ஆக பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுட்டுக் கொல்வதுதான் அஹிம்சைவாதிகளின் உண்மை முகம் .

Exit mobile version