நேற்று மகிந்த ராஜபக்ஷ பிறந்த நாள் கொண்ட்டாடங்களிற்கு இலங்கையில் பெருந்தொகையான பணம் செலவானதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென்னிலங்கைத் தினசரிகள் அனைத்திலும் பக்கம் முழுவதுமான விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. பெரும்பாலான ஊடகங்கள் மிரட்டலுக்கு அஞ்சியே இவற்றைச் செய்ததாகத் தெரிய வருகிறது. தேசத்தின் தந்தைக்கு வாழ்த்துக்கள் என்பதே விளம்பரங்களின் தலையங்கமாக அமைந்திருந்தது. கோவில்களில் பூஜைகளும், விகாரைகளில் பிரித் ஓதலும் இடம்பெற்றன. பாசிஸ்டுக்கள் கையாள்கின்ற வழிமுறைகள் அனைத்தும் மகிந்த ராஜபக்சவினால் கடைப்பிடிக்கப்படுகின்றது.