பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் சார்பில் வெள்ளியன்று வி.என். திவாரி நினைவு சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்பு ரையாற்றும்போது ஹமீது அன்சாரி இவ்வாறு கூறினார். மேலும் அவர் பேசியதாவது:
நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டமானது பொது வாழ்வில் ஈடுபடக்கூடியவர்கள் எந்த அளவிற்கு நன்னெறியுடன் ஒழுக்கம் தவறாது நடந்து கொள்ள வேண்டும் என்று வரையறுத்திருக்கிறது.
‘‘சமூக ஒழுக்கம் இல்லையென் றால், ஒட்டுமொத்த சமூகமே பாழ் பட்டுப் போகும், தனிநபர் ஒழுக்கம் இல்லையென்றால் ஜீவித்திருப்ப தற்கே மதிப்பு இருக்காது’’ என்று பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் கூறுகிறார். எனவே ஓர் உன்னதமான உலகை உருவாக்க சமூக ஒழுக்கமும் தனிநபர் ஒழுக்கமும் பின்னிப்பிணைந்தவைகளாகும்.
பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள் இதனை எந்த அளவிற்குக் கடைப்பிடிக்கிறோம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பிற்கும் நீதித்துறைக்கும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும், பொது நலனுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. ஆனால் இதனைச் செயல்படுத்துபவர்களின் நன்னெறி வாழ்க்கை குறித்து எதுவும் திட்ட வட்டமாகக் கூறப்படவில்லை.
சமீபத்தில் வெளியாகியுள்ள இரண்டாவது நிர்வாக சீர்திருத்தங்கள் ஆணையத்தின் அறிக்கையானது, சமூகத்தில் புரையோடிப்போயுள்ள லஞ்ச ஊழல் குறித்து மிகவும் கவலையுடன் குறிப்பிட்டிருக் கிறது.
அந்த அறிக்கையானது லஞ்சத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அநேகமாக மிகவும் வலுவற்ற நிலையிலேயே இருந்து வருவதாகவும் குறிப்பிடுகிறது. நேர்மையாக வாழ்பவர் என்றால் அவர் இந்த சமூகத்திற்கு லாயக்கற்றவர் என்கிற அள விற்கு நிலைமை மாறிப்போயிருக் கிறது. பொதுவாழ்வில் துஷ்பிரயோக மும் லஞ்சமும் பலருக்கு நடைமுறை வாழ்க்கையாகிப் போயிருக்கிறது.
லஞ்சத்தின் வீச்சு என்பது பெரு மளவில் கறுப்புப் பணம், மிகவும் ஆழ மான அளவில் பொருளாதாரக் குற் றங்கள் மற்றும் மோசடி நடைபெறு தல், இத்தகைய மோசமான மற்றும் இழிவான முறையில் வாழ்பவர்கள் அரசுக்கு எதிராகப் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி அளிக்கக் கூடிய அளவிற்குச் சென்றிருப்பதை யும் பார்க்க முடிகிறது. இவை நாட் டின் பாதுகாப்பிற்கே பெரும் அச் சுறுத்தலாக மாறிப் போயிருக்கிறது.
நன்னெறி வாழ்க்கை என்பது தானாக வராது. அது வளர்த்தெடுக் கப்பட வேண்டும் என்று அரிஸ்டாட் டில் சுட்டிக்காட்டியிருக்கிறார். எனவே நன்னெறியுடன் ஒருவர் வாழ்வது என்பதைத் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் வளர்த் தெடுக்கப்பட வேண்டும். ஆனால் இவ்வாறு நன்னெறிப் பழக்கத்தைப் புகட்ட வேண்டும் என்கிற உணர்வு சமூகத்தில், ஒவ்வொரு கட்டத்திலும் உதாசீனப்படுத்தப்படுவதைப் பார்க்க முடிகிறது. இதனை மாற்றியமைத்திட வேண்டும். எந்த ஒரு நாடும் தனிப் பட்ட முறையிலும், சமூக ரீதியாகவும் நன்னெறியுடன் இல்லாதிருப்பின் மாபெரும் நாடாக உயர்ந்திட முடி யாது.
இவ்வாறு ஹமீது அன்சாரி கூறினார்.