Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நேருவின் வாரிசு பிரியங்காவின் ஆடம்பர சிம்லா வீடு .

இந்திய மக்களின் வரிப்பணத்தை தங்களின் ஆடம்பர வாழ்வுக்கு பயன்படுத்துவதில் நேருவின் குடும்பம் அதாவது காந்தி பரம்பரை சளைத்ததல்ல. காந்தி தனது எளிமைக்கா செலவிட்ட கோடிக்கணக்கான ரூபாய்களில் இருந்து துவங்குகிறது இந்த ஆடம்பர வரலாறு. பிர்லா மாளிகையில் தங்கியிருந்து அரசியல் செய்த காந்தியின் வாரிசான ராஜீவ்காந்தி அந்தமான் தீவுக்கு ஓய்வெடுக்கச் சென்ற போது மதுரையில் இருந்து தனி விமானத்தில் பாயாசம் சென்ற வரலறுகள் எல்லாம் உண்டு. அந்த வகையில் காந்தியின் இன்றைய வாரிசுகளான ப்ரியங்கா, ராகுல்காந்தியும் இந்த ஆடம்பர வாழ்வுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். ராகுல் ஒரு பக்கம் தலித்துக்கள் குடிசை வாசிகளின் வீடுகளுக்கெல்லாம் ஏறி இறங்கி அரசியல் நாடகம் ஆடினாலும் ஆடம்பர வாழ்வில் அவர்கள் எல்லோருமே ஒன்றுதான் என்பதை ப்ரியங்கா சிம்லாவில் கட்டிவரும் ஆட்ம்பர மாளிகையே நிரூபிக்கிறது.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகள் பிரியங்கா காந்தியும் அதிகம் விரும்பும் கோடைவாசஸ்தலங்களில் சிம்லா முக்கியமானது. அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக கோடைகால விடுமுறையை இங்குதான் கழித்து வருகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன்பு கோடை விடுமுறையை குடும்பத்துடன் சிம்லாவில் கழித்துக்கொண்டிருந்த பிரியங்காவுக்கு, இங்கு நமக்கென சொந்த வீடு இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசை ஏற்பட, அடுத்த சில தினங்களில் அவரது கனவு இல்லம் உருவாக அங்கு இடம் வாங்கப்பட்டது.2007-ல் எழில் கொஞ்சும் மலையின் மீது 8 ஆயிரம் அடி உயரத்தில் 3150 சதுர அடி பரப்பிலான இடம் வாங்கப்பட்டு அதில் பிரியங்காவின் கனவு இல்லம் உதயமாகத் தொடங்கியது.இந்த இல்லத்தை கட்டிமுடிக்கும் பணி தில்லியை சேர்ந்த கட்டடக்கலை நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டது. கட்டடத்தின் கட்டுமானப் பணியை அந்நிறுவனத்தின் வல்லுநர் நீரஜ் சாய்னி கவனித்து வருகிறார். ப்ரியங்காவின் இந்த வீட்டின் மேற்கூறை இரும்பால் ஆனதாக அமைக்கப்பட்டு வருகிறது. கட்டடத்தை கட்டும் பணி ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டாலும் அந்த நிறுவனம் கட்டடத்தை அழகுறச் செய்யும் எந்த ஒரு பணியையும் பிரியங்காவின் அனுமதி இல்லாமல் செய்வதில்லை. அவரிடம் ஆலோசனை செய்து ஒப்புதல் பெற்றே செய்து வருகின்றது.சிம்லாவில் தொடர்ந்து மழை பொழிந்து வருவதால் பிரியங்காவின் கனவு இல்ல கட்டுமானப் பணி தாமதமடைந்து வருகிறது. எனினும் விரைவில் இல்லம் கட்டி முடிக்கப்படும் என்று நீரஜ் சாய்னி தெரிவித்தார்.தமது கனவு இல்லம் எப்போது கட்டி முடிக்கப்படும், அங்கு கோடை விடுமுறையை கழிக்கலாம் என்ற ஏக்கத்தில்தான் பிரியங்கா காந்தியும் உள்ளார்.

Exit mobile version