Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நேபாள மாவொயிஸ்டுக்களை அழிக்க்க உதவி வழங்கிய பிரித்தானிய அரசு: புதிய தகவல்கள்

2005 ஆம் ஆண்டு ரோந்து வரும் நேபாள இராணூவம்
2005 ஆம் ஆண்டு ரோந்து வரும் நேபாள இராணூவம்

அண்மையில் பில் மில்லர் வெளியிட்ட வரலாற்றி ஆவணம் ஒன்றில் பிரித்தானிய அரசு ஈழப் போராட்டத்தை அழிப்பதற்காக இலங்கை அரசை இராணுவமயப்படுத்திய தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. இன்றைய பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் யாழ்ப்பாணத்திற்குச் சென்று இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற அதே வேளையில் பிரித்தானிய அரசு இலங்கை அரசைப் பாதுகாத்த விடையங்கள் அந்த ஆவணத்தில் வெளியாகின. பில் மில்லரின் ஆவணத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரித்தானிய உளவுத் துறையுடனான உறவுகளும் ஈழப் போராட்டத்தை பிரித்தானிய அரசு கையாண்ட தரவுகளும் வெளியிடப்படவில்லை.

அண்மைக் காலங்களின் வெற்றிபெற்ற போராட்டம் என்றவகையில் நேபாள மாவோயிஸ்டுக்களின் போராட்டம் குறிப்பிடத்தக்கது. 13 வருடங்களாக நடைபெற்ற போராட்டத்தில் தலை நகர் கட்மண்டுவைச் சுற்றிவழைத்து மக்களும் மாவோயிஸ்டுக்களும் மன்னரைக் கைது செய்து அரண்மனையைக் கைப்பற்றினர். 2006 ஆம் ஆண்டில் நேபாளத்தில் மன்னராட்சி முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. மாவோயிஸ்டுக்க்களுக்கு எதிரான எதிர்ப்புரட்சி யுத்ததை நடத்துவதற்காக இந்திய சீன அரசுகள் நேபாள அரச படைகளின் பின்புலத்தில் செயற்பட்டன.

இவற்றுடன் கூடவே பிரித்தானிய அரசும் நேபாள அரச படைகளுக்கு உதவியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள்ன. நான்கு வருடங்கள் பிரித்தானிய அரச அதிகாரம் நேபாள அரசின் உளவுத்துறைக்கு மாவோயிஸ்டுக்களுக்கு எதிரானதாகப் போராடுவதற்கான பண உதவியை வழங்கி வந்துள்ளது. இவ்வுதவி மாவோயிஸ்டுக்களைக் கைது செய்து சித்திரவைதை செய்து கொலை செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானிய உளவு நிறுவனமான எம்.ஐ.5 நேபாள அரசிற்கு எதிர்ப்புரட்சி (counter-insurgency) நடவடிக்கைக்கான பயிற்சி, ஆலோசனை போன்றவற்றை வழங்கியுள்ளது. 2002 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டுக்கு உட்பட்ட நான்கு வருடங்களில் மஸ்ராங் ஒப்பரேஷன் என்று பெயரிடப்பட்ட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்து மாவோயிஸ்டுக்களை அழிப்பதில் பிரித்தானியா ஈடுபட்டிருந்தது.
தொமஸ் பெல் என்பவர் எழுதிய கட்மண்டூ என்ற நூலில் இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

உறுதியான மக்கள் சார்ந்த அரசியல், திட்டமிடப்பட்ட மக்கள் போராட்டங்கள், அணிதிரட்ட்ப்பட்ட மக்கள் திரள் அமைப்புக்கள் ஆகியவற்றின் காரணமாக நேபாள மாவோயிஸ்டுக்களின் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தம் வெற்றிபெற்றது.

http://www.theguardian.com/world/2014/aug/31/britain-accused-conniving-torture-maoists-nepal-civil-war

Exit mobile version