இந்தியாவின் பொம்மை அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாதவ் குமார் நேபாளின் அரசுக்கு மாவோயிஸ்டுகள் வித்திருந்த கெடு முடிவடைந்த நிலையில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்த அரசை உருவாக்க வேண்டும் அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும். இந்தியாவின் பொம்மை அரசாக செயல்படாமல் நேபாள மக்கள் ஜனநாயக அரசாக செயல்ப்ட வேண்டும் என்ற சில அடிப்படைக் கோரிக்கைகளை மாவோயிஸ்டுகளின் தலைவர் பிரசந்தா வித்தித்திருந்தார். இதற்கான பெருந்திரள் மக்கள் கிளர்ச்சியும் காதமாண்டுவில் நடத்தப்பட்ட நிலையில் நேற்று நேபாள ஜனாதிபதி ராம்பரன் யாதவைச் சந்தித்த பிரசந்தா அதிகாரத்தைப் பயன்படுத்தி மாதவ் குமார் நேபாளை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தினார். இந்நிலையில் மன்னாராட்டிக்கு எதிராகவும் இந்திய பொம்மை அரசுக்கு எதிராகவும் கிளர்ந்த நேபாள மக்கள் கிளர்ச்சியை சமாளிக்க முடியாத மாதவ் குமார் நேபாள் பதவி விலக முடிவு செய்துள்ளார். இன்னும் 48 மணி நேரத்திற்குள் அவர் பதவி விலகுவார் என்று சொல்லப்படுகிற நிலையில் இந்தியா என்ன விதமான அதிரடி நடவடிக்கையை எடுத்தாவது மாவோயிஸ்டுகள் செல்வாக்குப் பெறுவதை தடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
தொடர்புடைய பதிவுகள் :
ஈழப் போராட்டத்தை ஆதரிக்கிறோம் : நேபாள மாவோயிஸ்ட் கட்சி