நேபாளத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் உச்ச நீதிமன்ற நீதிபதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
நேபாள நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி ராணா பகதூர் பாம் (64), நேற்று நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில், காட்மாண்டு நகர் அருகே சங்கமூல் பகுதியில் பாக்மதி நதியோரம் உள்ள ஒரு கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு காரில் ஏற முயன்றார்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், நீதிபதி ராணா பகதூரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் நீதிபதி ராணா உயிரிழந்தார். மெய்க்காப்பாளர் உள்பட இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
நேபாளத்தில் மாவோயிஸ்டுக்கள் இடையே பிளவை ஏற்படுத்த இந்தியாவும் அமரிக்காவும் கூட்டாகஸ் செயற்பட்டு வருகின்றன.