Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நேபாளம், இலங்கை, ரீசீ.சீ : ஒரே நேர்கோட்டில்

1996 ஆம் ஆண்டிலிருந்து 2006 வரையான காலப்பகுதியில் நேபாள மாவோயிஸ்டுக்கள் மன்னராட்சிக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தி ஆட்சியைக் கையகப்படுத்தினர். இந்திய அரசும் சீன அரசும் மாவோயிஸ்டுக்களுக்கு எதிராக மன்னரின் அரச படைகளைப் பலப்படுத்தின. பிரித்தானிய அரசும் மாவோயிஸ்டுக்களை அழிப்பதற்கு மன்னருக்கு ஆதரவாகச் செயற்பட்ட தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. பிரித்தானிய உளவுப் படையான எம்.ஐ. 6 மாவோயிஸ்டுக்களை அழிப்பதற்கு அரசபடைகளுக்குப் பயிற்சிகள் வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாள உளவுப்படைக்கும் இராணுவத்திற்கும் கண்காணிப்புத் தந்திரோபாயங்களையும் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளையும்(counter-insurgency ) பயிற்சி வழங்கியதாகவும் நிதி வழங்கலில் ஈடுபட்டதாகவும் தெரியவருகிறது.
நேபாள இராணுவத்தால் சந்தேகத்தின் பேரில் கைதானவர்கள் கோரமாகச் சித்திரவதை செய்யப்பட்டனர். பலர் கொலை செய்யப்பட்டனர். சித்திரவதை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் பிரித்தானிய அரச உளவு நிறுவனம் கற்பித்ததாக அத் தகவல்கள் மேலும் கூறுகின்றன. தோமஸ் பெல் என்பவர் எழுதிய கட்மண்டூ என்ற நூலில் இத்தகவல்கள் வெளியாகியுள்ள்ன.
பிரித்தானிய அதிகாரிகள் நேபாளத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் சிலர் பிரித்தானிய தூதரகதிலிருந்தும் மற்றொரு குழு தனியாகவும் செயற்பட்டதாக நூல் மேலும் விபரிக்கிறது.
மாவோயிஸ்ட் போராளிகள் மத்தியில் உளவாளிகளை உருவாக்குவது தொடர்பாகவும், அவர்களின் நிலைகளுக்குள் ஊடுருவுவது தொடர்பாகவும் குறிப்பான பயிற்சிகளை வழங்கினர் என பெல் மேலும் கூறுகிறார்.
ஒரு புறத்தில் சித்திரவதைகளையும் கொலைகளையும் நிறுத்துமாறு மன்னராட்சிக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்ட பிரித்தானிய அரசாங்கம் மறுபுறத்தில் அந்த நடவடிக்கைகளை ஊக்கப்படுத்த அதிகாரிகளை அனுப்பிவைத்திருக்கிறது என்று பெல் தனது நூலில் கூறுகிறார். 2002 ஆம் ஆண்டில் நேபாளி இராணுவம் பல்வேறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டது. சர்வதேசிய மன்னிப்புச் சபை, மனித உரிமைக் கண்காணிப்பகம், பிரித்தானிய அரசு போன்றன இவற்றுக்கு எதிராகக் குரல்கொடுத்தன. பிரித்தானியாவும் அதன் நட்பு நிறுவனங்களும் போர்க்குற்றங்களுக்குத் துணை சென்றன.
இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கிய பிரித்தானிய அரசு அதற்கு எதிரான அறிக்கைகளையும் வெளியிட்டது. நேபாளத்தைப் போன்று தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணை உரிமைக்கான போராட்டத்தை அழிப்பதற்கு பிரித்தானியா இலங்கை அரசிற்கு ஆலோசனைகளையும் ஆட்பலத்தையும் வழங்கிற்று.
இதன் மறுபக்கத்தில் 2000ம் ஆண்டு ஆரம்பத்தில் லண்டனைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் ரி.சீ.சீ என்ற அமைப்பு பிரித்தானிய உளவுப்படையில் இணைந்து கொள்வதற்கு தமிழ் இளைஞர்களைக் கோரியதாகத் நேரடிச் சாட்சிகள் தெரிவிக்கின்றன. பில் மில்லர் என்பவர் கடந்த ஜூலையில் வெளியிட்ட ஆவணத்தில் இலங்கை அரசிற்கு பிரித்தானிய அரசு முப்பது வருடங்களுக்கு மேலாக வழங்கிவரும் இராணுவ உதவிகள் தொடர்பாகப் பல புதிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்த அதே வேளை ரி,சீ,சீ இன் பிரித்தானிய உளவுப்படையுடனான தொடர்புகள் மறைக்கப்படிருந்தன.

Exit mobile version