இந்த நிலையில் நேபாளத்தின் மன்னராட்சியை வெற்றிகரமாக முடிவிற்குக் கொண்டுவந்த மாவோயிஸ்ட் கட்சியின் பெரும்பான்மையினர் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) (CPN(M))தேர்தலை நிராகரிக்குமாறு பிரச்சாரம் செய்து வருகின்றது. பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் பிரச்சார நடவடிக்கைகள் பெரும் வரவேற்பைப் பெற்றறுள்ளது.
இதனால் பலர் கட்சி உறுப்பினர்கள் அரச படைகளால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள்னர். பிரசன்டா, பாபுராம்ம் போன்ற புரட்சியை நடத்திய தலைவர்களும் காட்டிக்கொடுப்பாளர்களாக மாறியுள்ள நிலையில் நேபாள அரச படைகள் தேர்தலை நிராகரிக்கக் கோரும் அனைவரையும் கைது செய்து சிறையில்டைத்து வருகின்றது.