காத்மண்டு, ஜூன் 29-
நேபாளத்தில் மன்ன ராட்சிக்குப் பின் அமைய வுள்ள முதல் மக்கள் அரசை மாவோயிஸ்ட் கட்சி அமைக்க வுள்ளது. மாவோயிஸ்ட் தலைவர் பிரச்சந்தா பிரத மராகிறார்.
நேபாள காங்கிரஸ் தலைவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா பிரதமர் பத வியை விட்டு விலகி னார். இவர் மன்னராட்சி மீது மட்டற்ற பிரேமை கொண் டவர் என்பது ஊரறிந்த தகவல். மன்னராட்சி ஒழிப்பு தீர்மானம் அரச மைப்பு சட்டமன்றத்தில் நிறைவேறும் வரை மன்ன ராட்சிக்கு குரல் கொடுத்து வந்தவர். மாவோயிஸ்டுகள் மேல் வெறுப்பு கொண்ட உள்ளூர், வெளியூர் பத்திரி கையாளர்கள் கொய்ரா லாவை நடுநிலையாளர் என்று வர்ணம் பூசுகின்றனர்.
மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சியை நிலைநாட்ட கடந்த 10 ஆண்டுகளாக நேபாள மக் கள் நடத்திய போராட்டங் களின் பலனாக மன்ன ராட்சி முடிவுக்கு வந்தது. அதையடுத்து அரசமைப்பு சட்டமன்றத் துக்கு நடந்த தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி பெரும் பான்மை பெறா விட்டாலும் தனிப் பெருங் கட்சியாக உருவெடுத்துள் ளது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும் (யுஎம்எல்) மாவோ யிஸ்டு களும் இணைந்து அறுதிப் பெரும்பான்மை பெறுகின்றன.
மாவோயிஸ்ட் தலைவர் பிரச்சந்தா பிரதமராவது உறுதியாகிவிட்டது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) தலைவர் மாதவ் குமார் ஜனாதிபதியாகிறார். பிரச் சந்தா அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கி ணைத்து அரசு அமைக்க பிரச்சந்தா விரும்புகிறார். ஆனால் நேபாள காங்கிரஸ் அமைச்சரவையில் சேரப் போவதில்லை என்று கூறி விட்டது