Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், நேபாள காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் புதிதாக பேச்சுவார்த்தை!

நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்)க்கும், நேபாள காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் புதிதாக நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, நாடாளு மன்ற நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக மாவோயிஸ்ட் தலைவர் பிரச்சந்தா கூறியுள்ளார்.

நேபாள குடியரசில் “மக்களே உயர்ந்தவர்கள்” என்ற கோட்பாட்டை மேலும் உறுதிப்படுத்த பேச்சுவார்த் தைகளுக்கு தயாராக இருப்பதாகவும் பிரச்சந்தா கூறி யுள்ளார்.

நேபாளத்தில் பிரச்சந்தா தலைமையிலான அரசு பதவி விலகியதைத் தொடர்ந்து, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. எனினும், இந்த அரசின் செயல்பாடுகளை தடுக்கும் விதத்தில் மாவோயிஸ்ட்டுகள் அடுத்தடுத்த போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மாவோயிஸ்ட்டுகளுடனான பேச்சு வார்த்தை, மாவோயிஸ்ட்டுகளுக்கு ராணுவத்தில் அளிக்கப்பட உள்ள வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச் சனைகள் குறித்து சர்ச்சை நீடித்து வந்தது. இந்நிலையில், அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண மாவோயிஸ்ட்டுகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைப்பையும், ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்த வேண்டு மென்று பிரச்சந்தா கூறினார்.

இந்தப் பின்னணியில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும், நேபாள காங்கிரஸ் தலைவர்களும் சமீபத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவோயிஸ்ட் கட்சி எழுப்பும் பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். இதன் பின்னர், இரு கட்சித் தலைவர்களுடன் பிரச் சந்தா தொலைபேசியில் உரையாடினார். இதைத் தொடர்ந்து, நேபாள நாடாளுமன்ற நடவடிக்கைகள் மீண்டும் சீராக துவங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version