Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நேபாளத்தில் உள்நாட்டுப் போர் மீண்டும் விரைவில் வெடிக்கும்!:மாவோ உயர்மட்டத் தலைவர் எச்சரிக்கை.

Nepal polls “நேபாளத்தில் மீண்டும் ஓர் உள்நாட்டு (சிவில்) போர் ஏற்படலாம்” என மாவோயிஸ்ட் உயர்மட்டத் தலைவர் டாக்டர் பாபுராம் பட்டாராய் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேபாளத்தில் ஏறக்குறைய 10 ஆண்டு காலத்திற்கும் மேலாக மாவோயிஸ்ட்டுகள் நடத்திய சிவில் போர், 2006 ஆம் ஆண்டு தான் முடிவுக்கு வந்தது.

“2006 ஆம் ஆண்டு அமைதி உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருந்தவாறு புதிய அரச சாசன வரைவு தீட்டப்படவேண்டும். இல்லையேல், நேபாளத்தில் மற்றுமொரு சிவில் போரை எதிர் கொள்ள நேரிடும்” என்றும் பாபுராம் எச்சரித்துள்ளார். மக்களாட்சி அதிகாரமுறையை அமுல்படுத்த நேபாள அரசு முன்வரவேண்டும். இதில் தவறினால் நாளை 19 ஆம் திகதி முதல் புதிய போராட்டம் மேற்கொள்ளப்படும் என நேபாள மாவோவாதிகள் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version