
நேபாளத்தில் புதிய அரசை சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவில் அமைப்பதற்கன திரை மறைவு வேலைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் இன்னும் மூன்றுமாத கால எல்லைக்குள் மாவோயிஸ்டுக்களின் தலைமையில் புதிய அரசு அமைந்து விடும் என்றும் அதற்கான மக்கள் பலமும் ஆதரவும் தம்மிடம் உள்ளது எனவும் கட்சிப் பேச்சாளரான தினநாத் சர்மா இனியொருவிற்குத் தெரிவித்தார். சீனா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் போன்ற எந்த அதிகாரவர்க்கத்தினதும் ஆதரவின்றி மக்களின் முழுமையான பங்களிபோடு வெற்றிகொள்ளப்பட்ட போராட்டத்தின் வெற்றி மக்களையே சென்றடைய வேண்டும் என்று மேலும் அவர் தெரிவித்தார். தமது கட்சிக்குள் கூட இந்திய அரசு முரண்பாடுகளைத் திட்டமிட்டு உருவாக்குவதாகவும் அதனைத் தாம் எதிர்கொண்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.