ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க நேட்டோ படையினரும், ஆப்கானிஸ்தானின் ராணுவம், போலீஸ் துறையினரும் ஒரே முகாம்களில் தங்கி இருந்து செயல்படுகிறார்கள்.
கண்டகார் நகருக்கு அருகேயுள்ள முகாமில் நேற்று நேட்டோ வீரர்கள் மீது ஆப்கானிஸ்தான் போலீஸ் அதிகாரி திடீரென்று துப்பாக்கியால் சுட்டார்.
இதில் ஒரு வீரர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். கடந்த 11 நாளில் இது போன்ற தாக்குதலில் 9 பேர் இறந்துள்ளனர்.