Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்லளில் ஒருவர் : மறைக்கப்பட்ட உண்மை

mandela-communist
ஏகாதிபத்திய ஊடகம் வெளியிட்ட உண்மை

தென்னாபிரிக்காவில் அதன் நிறவெறி அரசை அழிப்பதற்கான ஆயுதப்போராட்டத்தை நடத்திய தென்னாபிரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (SACP) நெல்சன் மண்டேலாவிற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை என ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் நிராகரித்து வந்தது. தென்னாபிரிக்காவின் தற்காலிக ஆட்சி மாற்றம் கூட கம்யூனிஸ் கட்சியின் பங்களிப்பும் போராட்டமும் இல்லாமல் சாத்தியமற்றது என்ற உண்மை மூடி மறைகப்பட்டது. அண்மையில் வெளியான நூல் ஒன்றில் நெல்சன் மண்டேலா கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்றும் விடுதலைக்காக இவ்வாறான தொடர்புகளைப் பேணி வந்தார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. நெல்சன் மண்டேலாவின் மரணத்தின் பின்னர் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில் நெல்சன் மண்டேலா கம்யூனிஸ்ட் கட்சியின் சாமானிய உறுப்பினர் அல்ல என்றும் அதன் தலைவர்களில் ஒருவர் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.(http://www.anc.org.za/nelson/show.php?id=10658)

இந்த உண்மை மறைக்கப்பட்டதன் பின்னணியில் பல் வேறு ஏகாதிபத்திய அரசியல் சதிகள் நடைபெற்றுள்ளதைக் காணமுடியும். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன முன்னணியாகவே செயற்பட்டது என்ற தகவல்களும் இப்போது வெளியாகியுள்ளன.

கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்களை எதிர்கொள்ள முடியாத ஏகாதிபத்தியங்கள், ஆபிரிக்க தேசிய காங்கிரசை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தனிமைப்படுத்தின. இதன் பின்னணியிலேயே சிறையிலிருந்த மண்டேலா விடுதலை செய்யப்பட்டு அந்த நாட்டின் ஜனாதிபதி ஆக்கப்பட்டார்.

நெல்சன் மண்டேலா தூக்கிலிடப்பட்டார் : சபா நாவலன்

 

Exit mobile version