Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நெய்வேலி சுரங்கத் தொழிலாளர் போராட்டம் : இணையும் ஒப்பந்தத் தொழிலாலர்கள்

நெய்வேலி நிலக்கரிச் சுரங்க நிரந்தர தொழிலாளர்கள் தங்களது ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்து இன்று 5-வது நாளாக வேலை நிறுத்தம் செய்துள்ளனர். இந்நிலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கலாம் என்று தெரியவந்துள்ளது.

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் சுமார் 15 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களும், சுமார் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் நிறுவனத்தின் பல்வேறு பகுதியில் வேலை பார்க்கின்றனர்.

தொழிற்சங்கமான தொ.மு.ச. பொது செயலாளர் கோபாலன் பாட்டாளி தொழிற்சங்க பொது செயலாளர் திலகர் ஆகியோர் இணைந்து என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அந்த கடிதத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் முழுமையாக வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு, தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

இதையொட்டி சுமார் 8 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க பொது செயலாளர் வெங்கடேசன் இன்று ஒரு அறி¢க்கை வெளியிட்டு உள்ளார். அதில்:

“நிரந்தர தொழிலாளர் களின் நியாயமான கோரிக்கைக்கு ஒப்பந்த தொழிலாளர்கள், தார்மீக அடிப்படையில் ஆதரவு தெரிவித்து வந்தோம். தொழிற்சங்க த¬லைம நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து இன்று மாலை நடக்கும் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.” என்றார்.

இந்த 13,000 தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தால் மேலும் முக்கியப் பணிகள் பாதிக்கப்பட்டு தமிழகம் முழுதும் மின்சாரத் தட்டுப்பாடு தீவிரமடையலாம்.

இந்தியா முழுவதும் சிறப்புப் பொருளாதார வலயங்களில்  பன்னாட்டு நிறுவனங்களுக்கு  இலவச மின்சாரம் வழங்கப்படுவது  குறிப்பிடத்தக்கது.

Exit mobile version