Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நெதர்லாந்து அரச தொலைக்காட்சி நிலையத்துள் புகுந்த ஆயுத இளைஞன் சொல்லவிரும்பியது என்ன

police_nosடச் தேசியக் தொலைக்காட்சியான Nederlandse Omroep Stichting (NOS) இன் கலையகத்தினுள் நுளைந்த ஆயுதம் தாங்கிய இளைஞர் ஒருவர் தான் முக்கியமான தகவல் ஒன்றை தொலைக்காட்சியின் ஊடாக உலகத்திற்குச் சொல்லவிரும்புபதாகக் கூறினார். மாலை நேர ஒலிபரப்பு நடந்துகொண்டிருந்த போது தொலைக்காட்சி நிலையத்தினுள் நுளைந்த இளைஞன் சற்று நேரத்தில் போலிசாரால் கைது செய்யப்பட்டார். கைத்துப்பாக்கி வைத்திருந்த இளைஞன் தன்னைப் பேச அனுமதிக்காவிட்டால் நெதர்லாந்து முழுவதும் குண்டுகள் வெடிக்கும் என அச்சுறுத்தியதாகப் போலிஸ் அறிக்கை கூறுகிறது.

சில நிமிடங்கள் தாமதிக்கவும் என்று தொலைக்காட்சித் திரைகளில் அரை மணி நேரமாகக் காண்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

நிகழ்ச்சி தடங்கலுக்குப் பின்னர் ஆரம்பமானதும் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட காணொளியில் ஆயுதம் தாங்கியவர் மற்றொருவருடன் பேசுவதைக் கேட்கக்கூடியதாகவிருந்தது. ‘உலகத்தில் முக்கியமான நிகழ்வு ஒன்று தொடர்பாகப் பேச அனுமதி தாருங்கள், நாங்கள் அனைவரும் உளவுத்துறையால் அமர்த்தப்பட்டுள்ளோம், முழுச் சமூகத்தையும் கேள்விக்குள்ளாக்கப்போகும் சம்பவம் ஒன்று எனக்குத் தெரியும்’ என்று அவர் கூறுவதையே கேட்கக்கூடியதாவிருந்தது.

இது போலிசின் அறிக்கைக்கு மாறுபட்டதாக அமைந்துள்ளது. ஒரு இளைஞன் சில விடையங்களை தனது உயிரைப் பணயம் வைத்து மக்களுக்குக் கூற முற்பட்டுள்ளார். அவை அனைத்துமே தொலைக்காட்சி நிலையத்திலிருந்த பாதுகாப்புக் கமராக்களில் பதிவாகியிருக்கும். தவிர, தொலைக்காட்சி நிலையத்தின் ஊழியர் ஒருவர் ஆயுத இளைஞனை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி நடைபெறாத அறை ஒன்றிற்கு அழைத்துச் சென்றதாகவும் கூறுகின்றார். ஆக, இளைஞன் என்ன சொல்லவந்தார் என்பது போலிசாராலும் தொலைக்காட்சியாலும் மறைக்கப்பட்டுள்ளது.

தவிர எட்டு இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என ஆயுதம் தாங்கி இளைஞன் கடிதம் ஒன்றை வைத்திருந்ததாக அதன் பிரதி ஒன்றை ஆர்.ரி.எல் தொலைக்காட்சி ஒளிபரப்புச் செய்தது. இக்கடிதம் போலியானதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என ரொய்டர் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இன்று ஐரோப்பா முழுவதும் நடைபெறும் கொலை நாடகங்களைப் போன்றே இச்சம்பவமும் உண்மைகள் வெளிவராமலே மறைக்கப்படலாம்.

Exit mobile version