நெடியவன் தொடர்பாக நோர்வே அரசுடன் இலங்கை அரசி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை இதனூடாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. நெடியவன் 2011 ஆம் ஆண்டு நோர்வே போலிசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக இலங்கை டெய்லி மிரர் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
புலம் பெயர் புலிகளில் ஒரு பகுதியினர் இலங்க்கையில் முதலீடுகளை இனக்கொலை அரசின் அனுசரணையுடன் ஆரம்பித்துள்ளனர். அண்மையில் கே.பி இன் தொடர்புகள் ஊடாக இலங்கையில் முதலிடுவது தொடர்பாக ஒரு தொகுதி புலம்பெயர் ‘தேசிய வியாபாரிகள்’ ஒன்று கூடல் ஒன்றை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு பகுதியினர் ஐரோப்பிய அரசுகளுடனும் அரசியல் வாதிகளுடனும் வர்த்தக உறவுகளை வளர்த்துள்ளனர். இனப்படுகொலை நடத்திய இலங்கை அரசுடனும், இனப்படுகொலைக்குத் துணைசென்ற ஐரோப்பிய அரசுகளுடனும் கைகோர்த்துக்கொள்ளும் இந்த வியாபாரிகள் முன்னை நாள் போராளிகள் ஐரோப்பாவில் போர்க்குற்றங்களுக்ககக் கைதானால் குரல்கொடுக்கப் போவதில்லை.
உலகிலுள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகளுடன் எந்த உறவுமற்ற ஏகாதிபத்திய முகவர்கள் போன்று செயற்படும் புலம்பெயர் அமைப்புக்களும் அதன் உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டால் குரல்கொடுக்க யாரும் இல்லாத நிலை தோன்றியுள்ளது.
இலங்கை அரசப் பொறுத்தவரை புலிகள் எங்கிருந்தாவது இலங்கையில் போராட்டத்தை ஆரம்பிக்கப் போகிறார்கள் எனப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டிய தேவை தோன்றியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளவும், பல்தேசிய நிறுவனங்களின் கொள்ளைய மக்களின் எதிர்ப்பின்றி இலங்கையில் இலகுபடுத்தவும் இவ்வாறான பரபரப்பு இலங்கை அரசிற்குத் தேவைப்படுகின்றது.