Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நெடியவன்,விநாயகம் ஆகியோருக்கு எதிரான தேடுதல்: இலங்கை,இந்திய மேற்கு அரசுகள் இணைவு

nediyavan_vinayagamபுலிகளின் உறுப்பினர்கள் எனக் கருதப்படும் 40 உறுப்பினர்களுக்கு எதிரான சிவப்பு எச்சரிக்கையை இலங்கை இன்டர்போல் போலிஸ் விடுத்துள்ளதான தகவல் தமக்கு அறிவிக்கபட்டுள்ளதாக இலங்கை அரசின் போலிஸ் ஊடகத் தொடர்பாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். போலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் சர்வதேச அளவில் செயற்படும் புலிகளின் உறுப்பினர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பிரான்சில் வசிப்பதாகக் கருதப்படும் வினாயகம் என்பவருக்கும் ஒஸ்லோவில் வசிப்பதாகக் கருதப்படும் பேரின்பநாயகம் சிவபரன் அல்லது நெடியவன் ஆகியோர் இத் தேடப்படும் சிவப்பு எச்சரிக்கைப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார். இலங்கையில் அண்மைக்காலத் தேடுதல்களின் போது 65 பேரைக் கைது செய்ததாகவும் அதில் 19 பேர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கிய முனைந்த வேளையில் இந்தியப் போலீசார் ஆறு புலிகளைக் கைது செய்துள்ளதாகவும் அவர்களை நாடுகடத்துமாறு கோருவதற்கு இலங்கை அரசு செயற்படுவதாகவும் அவர் அச்சந்திப்பில் தெரிவித்தார்.
இனப்படுகொலையின் பின்னர் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற நிலையிலிருப்பவர்களை அழிப்பதற்கு இலங்கை இந்திய மற்றும், மேற்கு அரசுகள் செயற்பட ஆரம்பித்துள்ளன.

இதுவரை இந்த அரசுகளின் தயவில் இனவாத அரசியலை வளர்த்தவர்கள் உலகின் ஏனைய போராடும் பிரிவினரோடு இணைந்துகொள்வதால் மட்டுமே அழிவுகளை மட்டுப்படுத்த முடியும்.

தேவியன், அப்பன், கோபி படுலைகளும் புதைந்துபோன அரசியலும் : கோசலன்

Exit mobile version