மேட்டுக்குடிக் கல்வியாளர்களின் அறிவு ஊற்றாகத் திகழும் சஞ்சிகைகளில் பிரதானமானது “Foreign Policy” . வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் இன்னொரு உப சஞ்சிகையான “Foreign Policy” இல் உலகின் முதல் நூறு சிந்தனையாளர்களின் பட்டியல் வெளியானது. உலகப் பொருளாதாரத்தைத்திலும் சமூகப் பொருளாதார அபிவிருத்தியிலும் தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கும் சிந்தனையாளர்கள் வரிசையில் பில்கேட்ஸ் போன்றோரின் பெயர் கூட இடம்பெறுவதுண்டு. இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் இம்முறை அதன் முதல் நூறு முக்கிய சிந்தனையாளர்களாக இஸ்ரேலியப் பிரதமரும் பாலஸ்தீனியர்களின் இனப்படுகொலைக்கள் உட்பட உலகின் பல்வேறு அழிவுகளின் சூத்திரதாரியுமான பெஞ்சமின் நதானியாஓ மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரும் காசா படுகொலைகளைத் திட்டமிட்டவருமான எதூ பாரக்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது.