Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நுளைவாசலில் நின்று பேசுவதை அவமானமாகக் கருதும் மேட்டுக்குடித் தமிழன் சுமந்திரன்

2009ம் ஆண்டின் பின்னர் ஜ.நா மனிதவுரிமைகள் அமையம் தற்போது 12ஆவது தடவை அமர்வினைக் கூட்டியிருக்கின்றது. இதற்கு முன்னரும் 11தடவை கூட்டப்பட்டிருக்கின்றது. அப்போது கூட்டமைப்பிடம் யாரும் கேட்காத கேள்வி இப்போது ஏன் கேட்கப்படுகின்றது? இதை புரிந்தும் புரியாதது போல சிலர் கேட்கத் தூண்டுகிறார்கள்.
47நாடுகளையும், பல அரசாங்கங்களையும் உள்ளடக்கியதாக மனிதவுரிமைகள் சபை உள்ளது. இதில் ஒரு நாட்டில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியான நாம் அங்கு சென்று எப்படி பங்கு கொள்ள முடியும்?
ஜெனிவா அமர்வுகளில் பதிவு செய்யப்பட்ட மனிதவுரிமை அமைப்புக்கள் சிலவற்றுக்கு அனுமதியிருக்கின்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றக் கிடைத்தாலும், 3நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும், அதேபோன்று பேசுகிறவர் தான் சார்ந்த கட்சியின் பெயரைக் கூறி பேசமுடியாது.
அவ்வாறு பேசினால் அங்குள்ள ஒழுங்கு விதிகளை மீறியதாக அந்த மனிதவுரிமைகள் அமைப்பின் பதிவு இரத்துச் செய்யப்படும். அரசு மட்டுமே பேச முடியும். இது எழுதப் பட்டிருக்கின்ற சட்டம். ஆனால் பக்க நிகழ்வு என்ற ஒன்றில் அமர்வில் கலந்து கொண்ட தூதுவர்கள், இராஜதந்திரிகளை அழைத்துப் பேசமுடியும்.
அதுவும் நுழைவாயிலில் நின்று சாப்பாடு வைத்திருக்கின்றோம் என கூறி சிலரை அழைத்து சில விடயங்களை அவர்களுக்குச் சொல்லமுடியும், அதுவும் அந்த மனிதவுரிமைகள் அமைப்பின் சார்பிலேயே சொல்ல முடியும். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு பல அரசுகளினால் அரசியல் இயக்கமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது.
உதாரணத்திற்கு சென்ற ஜப்பசி மாதம் அமெரிக்க இராஜங்கத்திணைக்களம் எம்மை அழைத்துப் பேசியிருக்கின்றது. வேறு யாரையும் அவ்வாறு அழைக்கவில்லை, அமெரிக்காவினுடையதும், இந்தியாவினுடையதும் அறிக்கைகளில் தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் பேசுங்கள் என கூறுகிறார்கள்.
அந்தளவுக்கு உலகளவில் எமக்கு அங்கீகாரம் இருக்கின்றது. அவ்வாறான தமிழ்தேசிய கூட்டமைப்பு, அப்படியான அமைப்பின் தலைவர் ஒரு நுழைவாயிலில் நின்று எதோவொரு மனிதவுரிமை அமைப்பின் பெயரில் நான்பேச விளைகிறேன் எனக்கு நேரம் தாருங்கள் எனக்கேட்டு பேசுவது முறையா.?
என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பியான சுமந்திரன் தெரிவித்துள்ளார்
நுளை வாசலில் நின்று பேசுவதைத் தரக்குறைவாக எண்ணும் மேட்டுக்குடித் தமிழரான சுமந்திரன் வாக்குப் பொறுக்குவதற்காக அவலத்துள் வாழும் மக்களின் நுளைவாசலில் நின்று போலி வாக்குறுதிகளை வழங்குவதை மறந்திருக்க மாட்டார். ஒடுக்கப்பட்ட தேசிய இனம் ஒன்றின் அரசியல் தலைவர்கள் மக்களோடு வாழ்ந்து போராடி பட்டினியால் மடிந்து விடுதலை பெற்ற வரலாறுகள் நீண்டு கிடக்கின்றன.

Exit mobile version