Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தைப் பகிஷ்கரியுங்கள் : தொழிற்சங்கங்கள்

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த பாராளுமன்ற விவாதங்களை எதிர்க்கட்சிகள் பகிஷ்கரிக்க வேண்டுமேன தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.பத்து தொழிற்சங்கங்களும் ஏனைய சில நிறுவனங்களும் கூட்டாக இணைந்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.

எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது கட்சித் தலைமையிடம் இந்தக் கோரிக்கையை முன்வைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.இது தொடர்பில் தொழிற்சங்கங்கள் கடிதம் ஊடாக பாராளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் எதிர்வரும் 10ம், 11ம் திகதிகளில் பாராளுமன்ற விவாதம் நடைபெறவுள்ளது.அரசாங்கத்தின் இந்த முனைப்பிற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர வர்த்தக வலய தொழிற்சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், அஞ்சல் மற்றும் தொடர்பாடல் தொழிற்சங்கம், இலங்கைத் தோட்டத் தொழிலாளர் ஒன்றியம் உள்ளிட்ட பத்து தொழிற்சங்கங்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. அரசாங்கத்தின் எதேச்சாதிகார போக்கிற்கு எதிர்க்கட்சிகள் துணை நிற்கக் கூடாது என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

Exit mobile version