Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நீண்ட தொலைவு சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை அமெரிக்கா சோதனை.

வாஷிங்டன், ஜூலை 19: நீண்ட தொலைவு சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை அமெரிக்கா சோதனை செய்ததாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
.
தனது ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தில் உள்ள ரேடார்கள் மற்றும்  இதர கருவிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக  இந்த சோதனை நடத்தப்பட்டதாக  பென்டகன் கூறியுள்ளது.

அலாஸ்காவில் உள்ள கோடியாக் தீவில் இருந்து இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டதாக பென்டகன் வெளியிட்ட செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

இந்த ஏவுகணை கலிபோர்னியாவில் உள்ள பீல்ஸ் விமானப்படை தளத்தில் இருந்து ரேடார் கருவிமூலம் கண்காணிக்கப்பட்டது.

Exit mobile version