இந்து மத வெறியரும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் பலவற்றின் சூத்திரதாரியுமான நரேந்திரமோடி பிரித்தானியாவில் வாழும் பெருந்திரளான குஜராத் புலம் பெயர் மக்களின் ஆதரவு பெற்றவர். முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலைகளில் நேரடியாகவே தொடர்புடையவர் எனக் கருதப்படும் மோடி அதிகாரத்திலிருந்து சட்டரீதியாக தனது பொலீஸ் துணைப்படையுடனேயே இவற்றை நடைமுறைப்படுத்துகிறார்.
குஜராத் கலவரம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் முன்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று ஆஜராகியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, மோடிக்கு ஏற்கெனவே தாக்கீது அனுப்பியது. அதன்படி இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டு இன்று மோடி ஆஜராவதென முடிவு செய்யப்பட்டிருப்பதை அவரது வழக்கறிஞர் மகேஷ்ஜெத் மலானி உறுதி செய்தார்.
பாதுகாப்புக் காரணங்கள் கருதி மோடி ஆஜராகும் நேரமும் இடமும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று காலை சிறப்பு புலனாய்வுக் குழுவின் முன்பு மோடி ஆஜரானார்.