Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நிஷா தேசாய் இலங்கையில்:தமிழ் விளம்பர ஊடகங்களுக்கு ‘சூடான செய்தி’

nishaவன்னிப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட பின்னர் இலங்கையில் தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலை தொடர்கிறது. இன்று நடைபெறும் இனப்படுகொலை  மற்றும் இலங்கை அரசின் அனைத்து மனிதகுல விரோத நடவடிக்கைகளுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் பின்னணியில் செயற்பட்டுவருகிறது. இலங்கை அரசிற்கு எதிராக மக்கள் போராட்டம் எழுச்சிபெறாமல் பார்த்துக்கொள்வதும் இலங்கை அரசை மிரட்டி தமக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்வதும் என்ற இரண்டு தளங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியம் செயற்பட்டு வருகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியம், இலங்கை இனப்படுகொலை அரசு, புலம்பெயர் மற்றும் இந்தியப் பினாமிகள் என்ற முக்கூட்டு,  இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்களை அழிக்கும் அரசியலின் ஒரு பகுதியாக ஜெனீவாவில் வருடம் தோறும் நடைபெறும் ஐ.நா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் ராஜபக்ச தண்டிக்கப்படப் போவதாகக் கூறிவருகின்றன.இதனால் போலி நம்பிகைகளை மக்களுக்கு வழங்கி மக்களைப் பார்வையாளர்களாக்கிப் போராடவிடாமல் தடுத்துவருகின்றன.
அமரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் தேசாயின் இலங்கைப் பயணம் விளம்பர ஊடகங்களின் இன்றைய ‘சூடான’ செய்தி.
இலங்கை பாசிச அரசை எதிர்க்காமல் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று கூறிவரும் சுமந்திரன், அமெரிக்கா இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்துவது உறுதி என நிஷா தேசாயை ஆதாரம் காட்டிக் கூறுகிறார்.
மனித உரிமைப் பேரவையில் தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற முடியும். ஐ.நா செயலாளர் அமைத்தது போன்ற விசாரணைக் குழுக்களை மட்டுமே முன்மொழிய முடியும்.
இலங்கையில் நடைபெறும் நிறுவனமயப்படுத்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையை நிறுத்துவதற்குக்கூட அழுத்தம் வழங்கமுடியாத அமெரிக்க ஏகபோக அரசின் நலன்கள் தமிழ்ப்பேசும் மக்களின் நலன்களுக்கு எதிரானவை.

Exit mobile version