Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நிலவை நெருங்கி கொண்டிருக்கிறது இந்தியாவின் சந்திரயான் -1

26.10.2008.

பூமியிலிருந்து ஒரு லட்சத்து 64 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தைத் தாண்டி, நிலவை நெருங்கி கொண்டிருக்கிறது இந்தியாவின் சந்திரயான் -1 விண்கலம் என இஸ்ரோ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் முதல்முறை யாக நிலவுக்கு ஆளில்லா விண்கலமான சந்திரயான் -1 கடந்த அக்டோபர் 22 அன்று காலை சுமார் 6.30 மணியள வில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

5 நாள் பயணத்தில், சந்திரயான் விண்கலம் ஒரு லட்சத்து 64 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை தாண்டியுள் ளது. பூமியின் எல்லையைத் தாண்டி, திட்டமிட்ட சுற் றுப்பாதையில் சென்று கொண்டிருக்கும் சந்திரயான், ஞாயிறன்று காலை 5.48 மணியளவில், விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி அடுத்த கட்ட வேகத்தை எட்டிப் பிடித் தது. விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள 440 நியூட்டன் நீர்ம என்ஜின் முறைப்படி எரியத் துவங்கி 16 நிமிட நேரம் எரிந்தது. இதைத் தொடர்ந்து விண்கலத்தின் வேகம் 74 ஆயிரத்து 715 கிலோமீட்டராக அதிகரித்தது.

இது உண்மையிலேயே ஒரு வரலாற்றுச் சாதனை என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் தலைவர் ஜி.மாதவன் நாயர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கு முன்பு இந்தியாவில் தயாரிக்கப் பட்ட செயற்கைக்கோள்கள் 36 ஆயிரம் கிலோமீட்டர் உயர வேகத்தில் மட்டுமே சென்றுள்ளன என்றும், தற் போது சந்திரயான் -1, 75 ஆயிரம் கிலோமீட்டரை தொட்டு விட்டது என்றும் இது அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றும் குறிப் பிட்டார்.

பூமியிலிருந்து சந்திரன் சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இதை நோக்கி திட்டமிட்ட பாதையில், திட்டமிட்ட வேகத்தில் சென்று கொண்டிருக்கும் சந்திரயான், நவம்பர் 8 அன்று நிலவை எட்டிப் பிடிக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. நிலவிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலை வில் நிலவின் சுற்றுப் பாதையில் சந்திரயான் -1 விண்கலம் நவம்பர் 8-ம்தேதி தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

 

Exit mobile version