நிலப்பறிப்பிற்கு எதிராக வலி வடக்கு மக்கள் இரண்டாவது நாளாகப் போராட்டம்
இனியொரு...
சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியமர்த்த கோரியும் வீடுகள் இடிப்பினை நிறுத்தக் கோரியும் வலி.வடக்கு மக்களின் தொடர் உணவு விடுப்புப் போராட்டம் மாவட்டபுரம் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக மக்கள் போராட ஆரம்பித்துள்ள்னர். இராணுவ ஆக்கிரமிப்பினையடுத்து கடந்த 23 வருடங்களாக தமது சொந்த நிலங்களை விட்டு வெளியேறிய வலி.வடக்கு மக்கள் தம்மை மீள்குடியமர்த்த வேண்டி 5தினங்களுக்கு இந்தத் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகின்றது.
ஆராயிரம் ஏக்கர் வரையிலான நிலம் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை போலிஸ் படை விசாரணைக்கு உட்படுத்தியதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களின் போராட்டங்களை ஒழுங்கமைக்கவும் தலைமை வழங்கவும் அரசியல் தலைமை வெற்றிடமாகக் காணப்படும் ஆபத்தான சூழலில் மக்கள் போராடுகின்றனர்.