பிரித்தானிய மக்களின் சிந்தனையை சிதத்து களியாட்டங்களில் ஒருமிக்க வைக்கும் அரசியல் செயல்பாடுகளில் ஒன்றாக கால்பந்தாட்டத்தைப் பயன்படுத்துகிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் கால்பந்தாட்ட சங்கங்களில் இணைந்து கொள்வதிலும் சூதாட்டங்களை நடத்துவதிலும் தமது பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகின்றனர். வளரும் குழந்தைகளின் கனவுலகக் கதாநாயகர்களாக உதைபந்தாட்ட வீரர்கள் உருவாகின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து உதைபந்தாட்டக் குழுவின் பிரதான வீரர் ஜோன் தெரி என்பவர் அன்டன் fபெர்டினான்ட் என்ற வீரரை நிறவாதத்துடன் கூடிய கெட்டவார்த்தைகளால் மைதானத்தில் திட்டியதற்காக வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.
அவரின் நிறவாத வார்த்தைகள் நீருபிக்கப்பட்ட போதும் அதனை அவர் வேண்டுமென்றே கூறவில்லை என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டு அவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கூட்டுணர்வற்ற தனினபர் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை உருவாக்கிய பிரித்தானிய அரச அதிகாரம் எதிர்காலத்தில் நிறவாதக் மோதல்களை திட்டமிட்டு உருவாக்குவதையே நெருக்கடிகளுக்குத் தீர்வாக முன்வைக்கிறதா என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.