Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நிருபமா ராவின் மகனின் திருமணத்தில் சர்வதேச போர்க்குற்றவாளி

அமரிக்காவிற்கான இந்தியத் தூதுவரும் இந்திய இராஜதந்திர வட்டாரத்தில் மிகுந்த செல்வாக்கு மிக்கவருமான நிரூபாமா ராவ் இன் மகனின் திருமண வைபவத்தில் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ச குடும்பத்துடன் கலந்துகொண்டுள்ளார். ஆளும்வர்க்கம் இன மத பேதங்களைக் கடந்து தமது வர்க்க ஒற்றுமையை உறுதிபடுத்திக்கொள்ளும் என்பதற்கு இது சிறந்த சான்று.
இலங்கையில் மக்களைச் சாரி சாரியாகக் கொன்று குவிப்பதற்குத் தலமை வகித்த கோதாபய உட்பட பல இலங்கை அரச உறுப்பினர்கள் வைபவத்தில் கலந்துகொண்டனர்.
சிறிலங்கா அதிபர் மற்றும் அரசுடன் நெருக்கமான உறவுகளை பேணி வரும் நிருபமா ராவ், கடந்து ஆண்டு இந்திய வெளிவிவகாரச் செயலர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றபோது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அவரை சிறப்பு விருந்துக்காக கொழும்புக்கு அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version