ஐ.நா இற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா லெபனானில் ஐ.நா அமைதிகாக்கும் படையின் நடவடிக்களின் கண்காணிப்புப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என இன்னசிட்டி பிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது. சவேந்திர சில்வா வன்னி இனப்படுகொலைகளைத் தலைமை தாங்கிய இராணுவத் தளபதிகளில் பிரதானமானவர். இனப்படுகொலையோடு நேரடியான தொடர்புடையவர். இவருக்கு எதிராக அமரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதாகக் கூறப்பட்ட போதும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
உலகம் முழுவதும் அமரிக்க ஐரோப்பிய நாடுகளின் அடியாளாகத் தொழிற்படும் அமைதிகாக்கும் படை நிலை கொண்டுள்ள நாடுகளில் பல குற்றச் செயல்களை மேற்கொண்டுள்ளது.
இதே வேளை, நிரந்தரமான தீர்வு ஒன்று ஏற்படும் வரை தமிழர் தாயகப் பகுதியான இலங்கையின் வடக்கு கிழக்கில் ஐக்கிய நாடுகளின் படையை நிறுத்த வேண்டும் என ஐ.நா. வதிவிடப் பிரதிநிதிகள் குழுவிடம் யாழ்ப்பாணத்தின் சிவில் சமூகம் வலியுறுத்தி உள்ளது.