Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நிரந்தரப் போர் நிறுத்தம் என்ற பேச்சிற்கே இடமில்லை : சிறிலங்கா அரசு

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போடும் வரை நிரந்தரப் போர் நிறுத்தம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று சிறிலங்க அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்த 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்தை கண்துடைப்பு என்று கூறிய விடுதலைப் புலிகள் இயக்கம், “மனிதாபிமானமும், அரசியல் தீர்வுக்காண அடித்தளமும், அனைத்துலக அனுசரணையும் கொண்ட நிரந்தரப் போர் நிறுத்தமே தேவை” என்று கூறியிருந்தது.

விடுதலைப் புலிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறிய சிறிலங்க அரசின் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா அபயவர்த்தன, விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடும் வரை நிரந்தரப் போர் நிறுத்தம் என்ற ஒன்றிற்கு இடமில்லை என்று கூறியுள்ளார்.

“விடுதலைப் புலிகள் மூச்சு விடுவதற்கும், படையினரின் முற்றுகைக்குள் அகப்பட்டுள்ள அவர்களுடைய தலைவர்கள் வெளியே தப்பிச் செல்வதற்கும் நேரம் தேவையாக இருக்கிறது. அதனால்தான் அவர்கள் நிரந்தரப் போர் நிறுத்தம் கோருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

Exit mobile version