யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர் மாசடைதல் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுச் செயற்திட்டமொன்று நேற்றுச் சனிக்கிழமை (19-12-2015) பிற்பகல் -1 மணி முதல் பிற்பகல்-5 மணி வரை யாழ்.நகர் பிரதான வீதியிலுள்ள திருமறைக் கலாமன்ற மணி மண்டபத்தில் இடம்பெற்றது.இதன் போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் துறை சார்பான நிபுணரல்ல .நான் சுன்னாகம் நிலத்தடி மாசடைதல் தொடர்பாகச் சில அவதானிப்புக்களைக் கூற விரும்புகிறேன்.நிபுணர் குழுவின் அறிக்கை முழுவதையும் வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது .அத்துடன் நிலத்தடி மாசடைதல் தொடர்பான பல்வேறு கூட்டங்களிலும் பங்குபற்றினேன் .நிபுணர் குழுவை நியமிக்கும் போது அது தொடர்பான துறை சார் வல்லுனர்களைத் தெரிவு செய்வது அவசியம் .வடக்கு மாகாண சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் ஒன்பது பேர் காணப்படுகிறார்கள் .ஆனால்,அதில் எத்தனை பேர் துறைசார் வல்லுனர்களாக உள்ளார்கள்? என்பது தான் கேள்விக்குரிய விடயம்.
நிபுணர் குழுவின் அறிக்கை வடக்கு மாகாண சபையின் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது,உறுப்பினர்கள் மாத்திரம் பார்வையிட முடியும் என்பதால் அறிக்கையை முழுவதுமாகப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.
எந்தப் பகுதிக் கிணறுகளில் நீர் பெறப்பட்டது ? கிராம சேவகர் ,ஊர்மக்கள் முன்னிலையில் கிணறுகளிலிருந்து நீர் பெறப்பட்டுத் தான் இவ்வாறான ஆய்வுகளை நடத்தவேண்டியது முக்கியம் .ஏனெனில் இது பல மக்களின் அடிப்படைப் பிரச்சனையாகவுள்ளது.ஆகவே ,தான் நான் வடமாகாண சபையின் நூலகத்தில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் கேட்டனான் .இந்த அறிக்கையில் எப்பகுதியிலும் இது தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.அடுத்தது நான் கேட்ட கேள்வி எங்கே இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டது ? என்பது முக்கியமான விடயம் .இது பற்றி நான் கேட்கும் போது நீங்கள் அவுஸ்ரேலியா என்றெல்லாம் சொல்கிறீர்கள் .அவுஸ்ரேலியாவுக்கு எவ்வாறு நீர் மாதிரிகளை அனுப்பினீர்கள்?எந்த நிறுவனத்தில் ஆய்வுகள் செய்தீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவுஸ்திரேலியாவில் தாம் ஆய்வுகள் மேற்கொள்ளவில்லை .இலங்கையிலுள்ள ஐ .ரி.ஏ நிறுவனத்திற்குஅனுப்பியே ஆய்வு மேற்கொண்டதாகக் கூ றினார்கள் .எனவும் நீர் மாதிரிகள் எங்கே பெறப்பட்டது? என்பது தொடக்கம் எங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது ? என்பது வரை நிபுணர் குழு அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை .
அவர்கள் இலங்கையிலுள்ள ஐ .ரி.ஏ இற்கும் , சிங்கப்பூரிலுள்ள ஆய்வு நிறுவனத்திற்கும் அனுப்பியே ஆய்வு மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார்கள் .அவ்வாறு என்றால் அறிக்கையின் கீழ் அவுஸ்ரேலியன் ரிப்போர்ட் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது . அத்துடன் அவுஸ்ரேலியன் ஸ்ரடியின்ங் என்றும் ,அத்துடன் நோர்வேயின் பெயரும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதே ஏன் ?இறுதியாக இடம்பெற்ற கூட்டத்தில் இந்தக் கேள்வியை நான் முன்னர் கேட்க முடியாமைக்குக் காரணம் அறிக்கை எனக்குப் பின்னரே கிடைத்தது.அடுத்த கூட்டத்தில் இது குறித்து நிச்சயம் கேள்வியெழுப்பவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார் .
செ -ரவிசாந்-