Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நிபுணர் குழுவின் அறிக்கை குறித்த விவாதம் : இந்தியா எதிர்ப்பு

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை பாதுகாப்புப் பேரவையில் விவாதம் செய்யப்படுவதற்கு இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை அமர்வுகளின் போது நிபுணர் குழு தொடர்பான விடயங்களை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க வேண்டாமென இந்தியா கோரியுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதே வேளை இந்தியா தமது பாதுகாப்பு அரசியல் நலன்களைக் கருத்தில் கொண்டே செயற்படும் என முத்துவேல் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சீனா ரஷ்யா ஆகிய நாடுகள் ஏற்கனவே தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெற்காசிய அரசியலின் பரிசோதனைக் களமாக இலங்கை உருவாகியுள்ளது என்பதை அரசியல் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

Exit mobile version