இலங்கையில் இடம்பெற்ற போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்க ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் நியமித்த நிபுணர்கள் குழு, இலங்கை செல்லவுள்ளதாக ஐக்கிய நாடுகள் செயலாளர்; நாயகம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பான் – கீ – மூன் நிபுணர்கள் குழு இலங்கை செல்வது தொடர்பான இணக்கப்பாடு காணப்படுவதாக கூறியுள்ளார்.