Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நிபுணர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தாது

பான் கீ மூனின் ஆலோசகர்களுடன் மட்டுமே இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும் எனவும், நிபுணர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தாது எனவும் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் செய்வதில் தடையில்லை என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹணே அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நிபுணர்கள் குழுவினர், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளிப்பதற்கு எந்தவித தடையும் கிடையாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

Exit mobile version