Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நிபந்தனை களுக்கு மன்மோகன் சிங் அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது!:அமெரிக்க அரசு.

07.09.2008.

வாஷிங்டன்:

அணு ஆயுத சோதனை நடத்தினால், இந்திய அணு உலைகளுக்கு அளிக்கும் எரிபொருள் சப்ளை நிறுத் தப்படும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் குறித்து ரகசியமாக ஏதும் வைத்தி ருக்கவில்லை என்றும், இந்திய அரசுக்கு ஏற்கெ னவே தெளிவாக தெரிவிக் கப்பட்டு விட்டது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவின் இந்தக் கூற்றை, மத்திய அறிவியல் துறை அமைச்சர் கபில் சிபல் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தியாவுடனான அணுசக்தி உடன்பாட் டிற்கு ஒப்புதல் அளிப்பதற் காக, புஷ் நிர்வாகத்திடம் அமெரிக்க நாடாளு மன்றம் எழுப்பிய கேள்வி களுக்கு, புஷ் நிர்வாகம் அளித்த பதில்கள் அடங்கிய முக்கிய ஆவணம் இரண்டு தினங்க ளுக்கு முன்பு வெளியானது. இதில், அணுசக்தி உடன் பாட்டை செயல்படுத்திய பின்னர் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்த முடியாது என்றும், மீறி நடத்தினால் இந்தியாவின் அணு உலைகளுக்கு எரி பொருள் சப்ளை முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், இந்தியா தனது சொந்த அணுசக்தி ஏற்பாட்டை பலப்படுத்தவோ, அணு எரிபொருளை மறு சுழற்சி செய்து பயன்படுத் தவோ உரிமையும் இல்லை; அதற்கு தேவையான தொழில் நுட் பமும் அளிக்கப்படாது என்பது உள்ளிட்ட பல் வேறு கடுமையான விதி முறைகள் உறுதி செய்யப் பட்டுள்ளன என்று புஷ் நிர்வாகம் தெள்ளத் தெளி வாக கூறியுள்ளது.

இந்த ரகசிய ஆவணம் வெளியானது இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. நாட்டு மக்களிடம் பொய் கூறிய மன்மோகன் சிங் அரசு, இனியும் ஆட்சி யில் நீடிப்பது ஏற்புடைய தல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார். நாட்டு மக்க ளுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதில் சொல்லியே தீர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. நாடா ளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டுமென்று பாஜக கூறியுள்ளது.

இந்நிலையில், அமெ ரிக்க நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய மேற்படி ஆவ ணம் ரகசியமானது அல்ல என்றும், அந்த ஆவணத் தில் உள்ள விஷயங்கள் இந்திய அரசுக்கு முறைப் படி தெரிவிக்கப்பட்டு விட் டது என்றும், அதில் குறிப் பிடப்பட்டுள்ள நிபந்தனை களுக்கு மன்மோகன் சிங் அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது என்றும், அமெரிக்க அயல்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் உட் வெள்ளியன்று விளக்கம் அளித்துள்ளார்.

வாஷிங்டனில் இது தொடர்பாக செய்தியாளர்க ளிடம் பேசிய ராபர்ட் உட், அணு ஆயுத சோதனை நடத்துவது தொடர்பான பிரச்சனையில் எங்களது (அமெரிக்காவின்) கருத்து என்ன என்பதை இந்தியர் கள் (இந்திய அரசு) புரிந்து கொண்டுள்ளார்கள் என் றும், ஏற்கெனவே அவர்களி டம் தெளிவாக அனைத் தையும் தெரிவித்து விட் டோம்; இதில் மறைப்ப தற்கு எதுவும் இல்லை என் றும் கூறினார்.

இந்திய அரசிடம் நாங் கள் என்ன தெரிவித் தோமோ, அதையே அமல் படுத்துவோம் என்று குறிப் பிட்ட அவர், 123 ஒப்பந்தத் தின் கீழ் இந்தியா செய்ய வேண்டிய நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளன என்றும், அணு ஆயுத சோதனை தொடர்பாக குறிப்பிடப்பட்டிருப்பதை இந்தியர்கள் ஒப்புக் கொண் டிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

கபில் சிபல் ஒப்புதல்

அமெரிக்காவின் இந்தக் கூற்றை மத்திய அமைச்சர் கபில் சிபல் ஒப்புக் கொண் டார். திருவனந்தபுரத்தில் கேரள காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற அணு சக்தி உடன்பாடு தொடர் பான கருத்தரங்கில் பங்கேற் றுப் பேசிய அவர், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அணுசக்தி உடன்பாடு குறித்து தவறாகப் பிரச்சா ரம் செய்வதாக குற்றம் சாட் டினார். அதே நேரத்தில் தன்னை அறியாமலே, அமெரிக்கா விதித்த நிபந்த னைகள் ஏற்கெனவே அர சுக்கு தெரியும் என்பதை யும் ஒப்புக் கொண்டார்.

அவர் பேசியது வரு மாறு:-

அணு ஆயுத சோதனை நடத்துவதிலிருந்து உலகின் எந்த சக்தியும் நம்மை தடுக்க முடியாது. அணு ஆயுத சோதனை நடத்துவதா? இல்லையா? என்பது நமது சுயேட்சையான முடிவு. அதே நேரத்தில் நாம் அணு ஆயுத சோதனை நடத்தி னால் நடவடிக்கை எடுப் பது அவர்களது (அமெரிக் காவின்) சுயேட்சையான முடிவு. 123 ஒப்பந்தம் என் பது அணு ஆயுத சோத னைகள் குறித்து பேச வில்லை. ஆனால், நமது பாதுகாப்பு சூழலில் ஏதே னும் மாற்றங்கள் ஏற்படு மானால் அதைத் தொடர்ந்து இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தி னால், அதைத் தொடர்ந்து அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டி யிருக்கும். அப்போது, இந்தி யாவுக்கு ஓராண்டு காலம் அவகாசம் கிடைக்கும். இந்தப் பேச்சுவார்த்தைக ளில் அமெரிக்கா திருப்தி யடையாவிட்டால், நமது அணு உலைகளுக்கு தேவை யான எரிபொருள் சப் ளைக்கு அவர்கள் தடை விதிப்பார்கள்.

Exit mobile version