Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நிபந்தனைகள் விதித்ததை பார்வதியம்மாளின் ரத்த உறவுகள் நிராகரித்து விட்டார்கள்- சிவாஜிலிங்கம்

மனித நேயமற்ற முறையில் பார்வதியம்மாளுக்கு நிபந்தனைகள் விதித்த இந்திய மத்திய மாநில அரசுகளின் முடிவை ஏற்காமல் இலங்கைக்கே திரும்பி விட்டார் பார்வதியம்மாள். இந்நிலையில் நேற்று சட்டமன்றத்தில் பேசிய கருணாநிதி பார்வம்மாளிடம் இருந்து நிராகரிப்புக் கடிதம் எதுவும் வரவில்லை என்றும் நிபந்தனைகளை அவர் நிராகரித்ததாக எந்த தகவலும் பார்வதியம்மாளிடம் இருந்து வரவில்லை என்றும் சொன்னார். இந்நிலையில் இது தொடர்பாக சென்னையை மையமிட்டு நடத்தப்படும் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிர்கு சில நிமிடங்களுக்கு முன்னர் பார்வதியம்மாளின் இலங்கை காப்பாளர் சிவாஜிலிங்கம் அளித்த நேர்காணலில். ” இந்திய அரசும் தமிழக அரசும் விதித்த நிபந்தனைகளை பார்வதிய்ம்மாளின் இரத்த உறவுகள் விரும்பவில்லை. அந்த நிபந்தனைகள் அவரின் கோரிக்கைக்கு எதிரானவை என்பதால் அந்த நிபந்தனைகள் பிடிக்காமல்தான் இலங்கைக்கே திரும்பினோம்”” என்று கூறினார். இந்நிலையில் நேற்று சட்டமன்றத்தில் பேசிய கருணாநிதி ‘’ பார்வதிம்மாளிடம் இருந்து தீர்க்கமான கடிதங்கள் எதுவும் வராத வகையில் ஊடகங்கள் சொல்வதை நம்ப வேண்டாம்” என்றார் அதாவது தெளிவான நினைவாற்றல் இல்லாத பார்வதியம்மாளே இவருக்கு கடிதம் எழுத வேண்டுமாம் என்கிற தொனியில்தான் கருணாநிதி இப்படிச் சொன்னார். இப்போது இங்கே இன்னொரு கேள்வி எழுகிறது பார்வதியம்மாளால் கருணாநிதிக்கு எழுதியதாகச் சொல்லபப்ட்ட கடிதம் உண்மையிலேயே பார்வதியம்மாளால் சுய நினைவோடு எழுதப்பட்டதா? என்கிற கேள்வியும் இங்கே எழுகிறது. அவரது இரத்த உறவுகளிடம் விசாரித்தவரையில் அவர்கள் யாருக்குமே இப்படியான கடிதம் ஒன்று எழுதப்பட்டது தெரியாது என்கிறார்கள். அபப்டியென்றால் கருணாநிதி ஆதரவாளரான் சு,ப. வீரபாண்டியன் இக்கடிதம் எவ்வாறு பெறப்பட்டது என்பதை சொல்வாரா? என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.

Exit mobile version