நிபந்தனைகளுடன் பார்வதியம்மாளுக்கு விசா? வர விருப்பமில்லாத பார்வதியம்மாள்?
இனியொரு...
சிகிச்சை முடிந்ததும் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே திரும்புச் சென்று விட வேண்டும், அரசு சொல்லும் மருத்துவமனையில் அரசுச் செலவில் மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள், தடை செய்யப்பட்ட அமைப்பினர் எவரையும் சந்திக்கக் கூடாது, அரசியல் பேசக் கூடாது என்கிற ஏராளமான நிபந்தனைகளுடன் பார்வதியம்மாளுக்கு விசா வழங்க இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகள் யாரும் மாநில முதல்வர் கருணாநிதியால் பரிந்துரைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகும். இந்நிலையில் திருப்பி அனுப்பி அவமானப்படுத்திய பிறகு, முசிரியில் உள்ள தனது மகனிடம் கூட இருக்க அனுமதிக்காத நிபந்தனைகளுடன் கூடிய விசாவைப் பார்வதியம்மாளோ அவருடன் உள்ளவர்களோ விரும்பவில்லை எனத் தெரிகிறது. பார்வதியம்மாளுக்கு வீசா வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதை சட்டமன்றத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.