நாவற்குழியிலுள்ள வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளில் தென்னிலங்கையிலிருந்து யாழ்.வந்து தங்கி தம்மை யாழ்ப்பாணத்தில் குடியேற்றுமாறு கோரி வந்த சிங்கள மக்களை குடியேற்றியுள்ள நிலையில், அக்காணிகளில் தமிழ் மக்கள் பலரும் கொட்டில்களைப் போட்டு குடியேறியுள்ளனர்.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த மக்கள், இந்தக் காணியில் நீண்ட காலத்திற்கு முன்னர் நாமே வசித்து வந்தோம், 1995 ஆம் ஆண்டு இந்த மண்ணில் இருந்து இடம் பெயர்ந்து வெளியோறினோம். ஆயினும் இப்போது நாங்கள் வேறு மக்களின் வீட்டுக்காணிகளில் வாழ்ந்து வருகின்றோம். இந்தநிலையில் மீண்டும் நாங்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் அலைந்து திரியும் போது எமது நிலத்தில் சிங்களவர்கள் வந்து எவ்வாறு குடியேற முடியும்? நாங்கள் வாழ்நத காணிகளில் சிங்கள மக்கள் குடியேறும் போது நாமும் குடியேறத்தானே வேணடும் எனத்தெரிவித்துள்ளார்கள்.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் தமது இருப்பிடத்திற்கு வந்திருக்கின்றார்கள். இந்த நடவடிக்கை சரியான நடவடிக்கைதான. எனவே அரசு உடனடியாக செயற்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுத்து எமது மக்களுக்கான ஆவணங்களை வழங்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்