Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாவற்குழியில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடும்பங்கள் : தொடரும் ஆக்கிரமிப்பு

இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் இலங்கை அரசு, 30 இற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்களை யாழ்ப்பாணம் நாவற்குழி குடியேற்றத்திடத்தில் குடியேற்றியுள்ளது. 70 களின் இறுதியில் யாழ்ப்பாணத்தை விட்டு தமிழ்க் குறுந்தேசிய வாதிகளால் பலவந்தமாக வளியேற்றப்பட்ட, 100 இற்கும் குறைவான, யாழப்பாணத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட குடும்பங்களைச் சார்ந்தவர்களில் பலர் யாழ்ப்பாணத்திற்கு மீள வரவில்லை . பெரும்பாலோனோர் மகிந்த அரசு மற்றும் ஹெல உறுமைய கூட்டாக நடத்திய திட்டமிட்ட குடியேறிகளாகவே யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியுள்ளனர். அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களை நியாயப்படுத்தும் அரசாங்கம், எங்கெல்லாம் வெறும் காணிகள் இருக்கின்றனவோ அங்கெலாம் மக்கள் குடியேற்றப்படுவார்கள் என்கின்றது. 9.11.2010 இரவு நாவற்குழிப் பிரதேசத்தில் குடியேற்றப்பட்ட மக்களைத் தொடர்ந்து ஏஞ்சியவர்களையும் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று புலிகள் அதே வழிமுறைகளில் மேற்கொள்ளப்படும் அரசியலின் பின்விளைவாக தமிழ்ப் பேசும் மக்களின் தேசியத் தன்மையைச் முற்றாகச் சீர்குலைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இலங்கை அரசின் சோவனிசம் வலுப்பெறுகிறது . முன்னெப்ப்போதையும் விட இப்போது இலங்கை அரச பாசிசத்த்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஊடகத் துறையைச் சார்ந்த ஒருவர் கருத்து வெளியிட்டார். தவறும் பட்சத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்புத் தொடரும். தவிர, இலங்கை இந்திய அரசுகள் இணைந்து நடத்தும் உளவியல் யுத்தமும் எதிர்கொள்ளப்பட வேண்டுமென பரவலான கருத்துக்கள் நிலவுகின்றன.

Exit mobile version