இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் இலங்கை அரசு, 30 இற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்களை யாழ்ப்பாணம் நாவற்குழி குடியேற்றத்திடத்தில் குடியேற்றியுள்ளது. 70 களின் இறுதியில் யாழ்ப்பாணத்தை விட்டு தமிழ்க் குறுந்தேசிய வாதிகளால் பலவந்தமாக வளியேற்றப்பட்ட, 100 இற்கும் குறைவான, யாழப்பாணத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட குடும்பங்களைச் சார்ந்தவர்களில் பலர் யாழ்ப்பாணத்திற்கு மீள வரவில்லை . பெரும்பாலோனோர் மகிந்த அரசு மற்றும் ஹெல உறுமைய கூட்டாக நடத்திய திட்டமிட்ட குடியேறிகளாகவே யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியுள்ளனர். அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களை நியாயப்படுத்தும் அரசாங்கம், எங்கெல்லாம் வெறும் காணிகள் இருக்கின்றனவோ அங்கெலாம் மக்கள் குடியேற்றப்படுவார்கள் என்கின்றது. 9.11.2010 இரவு நாவற்குழிப் பிரதேசத்தில் குடியேற்றப்பட்ட மக்களைத் தொடர்ந்து ஏஞ்சியவர்களையும் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று புலிகள் அதே வழிமுறைகளில் மேற்கொள்ளப்படும் அரசியலின் பின்விளைவாக தமிழ்ப் பேசும் மக்களின் தேசியத் தன்மையைச் முற்றாகச் சீர்குலைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இலங்கை அரசின் சோவனிசம் வலுப்பெறுகிறது . முன்னெப்ப்போதையும் விட இப்போது இலங்கை அரச பாசிசத்த்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஊடகத் துறையைச் சார்ந்த ஒருவர் கருத்து வெளியிட்டார். தவறும் பட்சத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்புத் தொடரும். தவிர, இலங்கை இந்திய அரசுகள் இணைந்து நடத்தும் உளவியல் யுத்தமும் எதிர்கொள்ளப்பட வேண்டுமென பரவலான கருத்துக்கள் நிலவுகின்றன.
எழுபதுகலில் இருதியில் தமிழ்க் குருந்தேசியவாதிகலால் 100க்குக் குரைவான சிஙலக் குடும்பஙல் யாழ்ப்பானத்தை விட்டு வெலியேர்ரப்பட்டதாகநீஙல் சொல்வாது பொய்! பொய்!
அந்தநேரம் யாழில் பொலிச இராச்சியம் – வன்முரைக் குழு ஏதும் இல்லை.நீங்கல் சிங்கல
வன்முரையுடன் சமப்படுட்தவே இவ்வாரு சொல்கீரீர்கல்: தமிழ் இடதுசாரிகல்நீன்டகாலமாக இத்தவரைச் செய்கிரார்கல்.1977இல் இருந்த சிங்கலவர் பொலிஷ் பாதுகாப்புடன் தான் வெலியேரினார்கல்: அவர்கலுக்கு எந்த தீமையும்நிகழவில்லை. அய்யா எப்போதும் உன்மையைப் பேசுங்கல்.
//”70 களின் இறுதியில் யாழ்ப்பாணத்தை விட்டு தமிழ்க் குறுந்தேசிய வாதிகளால் பலவந்தமாக வளியேற்றப்பட்ட, 100 இற்கும் குறைவான, யாழப்பாணத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட குடும்பங்களைச் சார்ந்தவர்களில் பலர் யாழ்ப்பாணத்திற்கு மீள வரவில்லை”// இங்கு கருத்து பகிர்வவர்களும் காட்டுக்கத்து கத்துபவர்களும் இந்தசெய்தியையும் தளத்தையும் சற்று உற்று நோக்குங்கள்…….இன்றைய நவீன புலனாய்வு அரசியலில் விஷம் கொடுத்துத்தான் கொல்லவேண்டும் என்பதில்லை
நாவற்குழி,அரியாலை என காடாய்க் கிடக்கும் மண்ணீல் குடியேறூம் சிங்கள பாட்டாளீ நாடாக்குவான் என நம்பிக்கை கொள்ளாது நம்மை பாழாக்கும் பாசிசம் பேசுவது உங்களூக்கு பகிடியாகத் தெரியவில்லை.வேதனை நமது மக்களூக்கும் வாழ்க்கை தாருங்கள் என்பதுதான் அதை ஏழைச் சிங்கள் மக்களோடு தனகாது அவர்களோடு இணந்து பெறவேண்டும்.அதை விடுத்து சிங்களம் தமிழ் என நாம் பேசினால் அது முற்றூப் பெறாத பிரச்சனைகளாகவே தொடரும்.
யாரும் எங்கும் வாழலாம் அது அவரவருடய விருப்பமும் அடிப்படை உரிமையுமாகும் ஆனால் ஒரு அரசாங்கம் ஒரு மக்கள் கூட்டத்தை தள்ளிக்கொண்டுவந்து பாதுகப்பும் உணவும் கொடுத்து உறங்குவதற்கு வீடும் கொடுத்தால் அது ஆபத்தானது.
தத்துவங்கள் பேசுவது வேறு யதார்த்தம்வேறு இந்த திட்டமிட்ட குடியேற்றங்களின் பின்னால் மிகப்பெரிய ஆபத்து மறைந்திருப்பதை உணரமுடியாமல் இருப்பது நகைப்பிற்குரியது தமிழ் மாறன்.
தமிழா்கள் சிங்களப்பகுதியில் இலங்கை அரசின் தயவால் சென்று ஒரு போதும் குடியேறியதில்லை மறந்துவிடாதீா்கள்.
இலங்கையில் கொழும்பு கண்டி போன்ற நகார்களுக்கு இணையாக கிளிநொச்சி திருமலை மற்றும் யாழ்ப்பாணம் என்பன தொண்ணூறு வீதம் பெளத்த மயமாகப் போகின்றது. அதற்கான திட்டங்கள் கடந்த ஜனவரி தொடக்கம் வரையப்பட்டுவிட்டன.
கொழும்பில் இருக்கும் தமிழ் முஸ்லிம்களை வெளியேற்றி அங்கும் தெற்கின் சிங்களவர்களை குடியேற்றுவது அடுத்த திட்டம்.
தெற்கைப் பொறுத்தவரை பெரும்பாலான பிரதேசங்களில் விவசாயத்திற்கான நீர்ப்பாசன வசதி இல்லை. அப்பிரதேசங்களை பெருந்தோப்புகளாக தம் குடும்பத்தவர் வசம் கொண்டு வரும் ஜனாதிபதியின் திட்டப்படி குறித்த பிரதேசங்களில் குடியிருக்கும் அப்பாவி சிங்கள மக்கள் ஆசை வார்த்தை காட்டப்பட்டு தமிழர் பகுதிகளில் குடியமர்த்தப்படவுள்ளனர். அதற்கு சீனாவும் உடந்தை. அதன் போது தான் அவார்களும் அப்பகுதியில் காலூன்ற முடியும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. இதை நான் பல தடவைகள் வெளிப்படுத்தியுள்ளேன்.
சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து தெற்கிலிருந்தும் , கிழக்கில் இருந்தும் , வன்னியின் எல்லை ஓரக் கிராமங்களிலிருந்தும் வெளியேற்றப்பட்ட தமிழ்மக்களை உங்களால் குடியேற்ற வக்கில்லை , ஆக 83 இல் வெளியேறிய சிங்கள மக்களை மட்டும் குடி அமர்த்த சட்டமும் , நீதியும் , அதிகாரமும் , பாச உணர்வும் திடீர் என்று வந்ததோ…மீண்டும் மீண்டும் தமிழர்களை சிங்களவர்தான் போராடாத்தூண்டுகிறார்கள்.அடக்கு முறைகளிலிருந்துதானே போராட்டம் வெடிக்கிறது. சிங்கள்ம் பல பிரபாகரன்களைத் பிரசவிக்க முனைகிறது.
கொழும்பின் அடுத்த கட்ட விரட்டியடிப்பு ஆரம்பமாகப் போகின்றது. கொழும்பில் எண்பதினாயிரம் சட்டவிரோத குடியிருப்புகள் இருக்கின்றன என்று மாவட்ட அரசாங்க அதிபார் தெரிவித்துள்ளதாக அங்கிருக்கும் எனது தொடர்புகள் மூலம் அறிந்தேன். அடுத்த கட்டம் நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது போன்று அப்பாவி தமிழ் – முஸ்லிம் குடும்பங்கள் சட்டவிரோத குடியிருப்பு என்ற பெயரில் அங்கிருந்து விரட்டியடிக்கப்படப் போகின்றன. கிண்ணியாவின் கண்டக்காடு பகுதியில் அப்படி ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டு விட்டது.
எட்ட இருந்து கூப்பாடு போடுகிற எத்தனை பேர் சொந்த மண்ணில் குடியேற வர ஆயத்தமாயுள்ளனர்?
முதலில் தமிழ்த் தலைவர்களிடமும் முஸ்லிம் தலைவர்களிடமும் அவர்களின் செயலின்மைக்கெதிராகக் குரல் கொடுப்போமா?