Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்று 30/11/2011 பிரித்தானிய அரச ஊழியர்கள் வேலை நிறுத்தம்

இன்று 30/11/2011 பிரித்தானிய அரச ஊழியர்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். பொதுவாக இங்கிலாந்திலும் வேல்சிலும் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனவும், ஸ்கொட்லாந்தில் பாடசாலைகள் நடைபெறுவது பாதிக்கப்படலாம் என்றும் எதிர்வுகூறப்படுகிறது. 29 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. 1979 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேலை நிறுத்ததின் பின்னர் மிகப் பெரிய அளவில் நடைபெறும் வேலை நிறுத்தம் இதுவாகும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய பல் தேசிய முதலாளிகளின் வருமானம் பல மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த வரம் பிரித்தானிய வங்கி ஒன்றை பணக்காரரான ரிச்சார் பிரண்சன் வாங்கிக்கொண்டார். தொழிலாளர்களின் உழைப்பின் பெறுமானம் அரசால் திட்டமிட்டுக் குறைக்கப்பட்டுகின்றது. ஓய்வூதியத் தொகைக்கு தொழிலாளர்கள் பணத்திலிருந்து 2.8 பில்லியன்களை அரசு குறைத்துள்ளது. ஓய்வூதித்திற்கான வயதெல்லையை அதிகரித்துள்ளது. ஊதியத் தொகை அதிகரிப்பை நிறுத்தியுள்ளது. இவற்றிற்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டம் பிரித்தானியாவில் போராட்டங்களுக்கான ஆரம்பமாகும் எனக் கருத்து நிலவுகிறது.
2.6 மில்லியன் ஊழியர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் இப் போராட்டத்தினால் போக்குவரத்து சேவைகளின் ஒருபகுதியும் பாதிப்படையலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

Exit mobile version