Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்று; முதலாளித்துவ பயங்கரவாதத்தை தோலுரிக்கும் மாநாடு !

இன்றைக்கு உலகத்தை ஆட்டி படைக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை தோலுரிக்கும் மாநாடு இன்று ஞாயிறு 25-ஜனவரி-2009 அன்று அம்பத்தூரில்  நடக்க இருக்கிறது.

காலை (எஸ்.வி.நகர்)ஓரகடத்தில் கருத்தரங்கமும், மாலை அம்பத்தூர் OTயில் பொதுக்கூட்டமும், கலை நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கின்றன. முழு விவரங்கள் பின்வருமாறு.

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்சி நிரல்


இடம் :
டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம்,
எஸ்.வி. நகர், ஓரகடம், அம்பத்தூர்

நிகழ்ச்சி நிரல்
தியாகிகளுக்கு வீரவணக்கம்

கருத்தரங்கம்
காலை அமர்வு – காலை முதல் 1 மணி வரை

தலைமை :
தோழர் அ. முகுந்தன்,
தலைவர் பு.ஜ.தொ.மு

சிறப்புரை :

கிள்ளுக்கீரைகள் அல்ல தொழிலாளி வர்க்கம்…
கிளர்ந்தெழுந்தால் நாட்டின் இயக்க்மே நிற்கும்!
தொழிலாளத் தோழனே,
வர்க்கமாய் ஒன்றுசேர்!
வலிமையை நிலைநாட்டு!

தோழர் துரை. சண்முகம்,
ம.க.இ.க.
***

வேலை நேரத்திற்கு வரம்பில்லை…
குறைந்தபட்ச ஊதியமில்லை…
தொழிற்சங்க உரிமையுமில்லை…
உரிமைகளை ஒழிக்கும் உலகமயம்!
வழக்குரைஞர் சி. பாலன்,
கர்நாடகா உயர்நீதி மன்றம், பெங்களூர்
***

மாலை அமர்வு

பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை

பணி நிரந்தரமில்லை….
மருத்துவ வசதியில்லை….
தினக்கூலி, ஒப்பந்தக் கூலி,
அவுட்சோர்சிங் அக்கிரமங்கள்!

தனியார்மயம் – தாராளமயம் – கொத்தடிமைமயம்!

தோழர் சுப. தங்கராசு,
பொதுச்செயலாளர், பு.ஜ.தொ.மு.

***

ஆட்குறைப்பு, வேலை மறுப்பு,
ஆலை மூடல், விலைவாசி ஏற்றம்…

மூலகாரணம் முதலாளி வர்க்கத்தின்
ஊக வணிகச் சூதாட்டம்!

முதலாளித்துவம் கொல்லும்!
கம்யூனிசமே வெல்லும்!

தோழர் பா. விஜயகுமார்,
பொருளாளர், பு.ஜ.தொ.மு.

***

நேருரைகள் :

சங்கம் துவங்கினோம்!
அடக்குமுறைகளை எதிர்கொண்டோம்!
வர்க்க ஒற்றுமையால் வென்றோம்!

போராட்டத்திற்கு தலைமையேற்ற
பல்வேறு தொழிலாளர்களின் அனுபவங்கள்

நன்றியுரை :

தோழர் இல. பழனி,
துணைத்தலைவர் பு.ஜ.தொ.மு.

***

பொதுக்கூட்டம்

மாலை 6 மணி – அம்பத்தூர் O.T. மார்க்கெட்

தலைமை :

தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
பு.ஜ.தொ.மு.

மாநாட்டுத் தீர்மான விளக்கவுரை :
தோழர் சுப. தங்கராசு,
பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு.

சிறப்புரை :

தோழர் மருதையன்,
பொதுச் செயலாளர், ம.க.இ.க. தமிழ்நாடு.
***
புரட்சிகர கலைநிகழ்ச்சி
மையக் கலைக்குழு,
மக்கள் கலை இலக்கிய கழகம்,
இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்வதற்காக பதிவர்களும் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள். நிதி உதவியும் அளியுங்கள்.

தொடர்புக்கு :

தோழர் அ. முகுந்தன், தலைவர் பு.ஜ. தொ.மு.: 94448 34519, 94444 42374தோழர் பாண்டியன்: 99411 75876

 

 

Exit mobile version