இரங்கலுக்கு வந்தவர்கள் அழுதனர், கவிதைகளையும் கடிதங்களையும் படித்தனர், கிறிஸ்ரோலாஸ் “அரசியல் கொலையுண்டவர்” என்று கோஷங்களைப் பாடினர். மத சார்பற்ற கூட்டத்திற்குப்பின் அவர்கள் ஏதென்ஸ் நகரத்தின் மையத்தின்வழியே சதுக்கத்திற்குச் சென்றனர்.
தன்னுடைய தற்கொலைக் குறிப்பில் கிறிஸ்ரோலாஸ் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியின் ஆணையில் மிருகத்தனச் சிக்கன நடவடிக்கைகளை சுமத்தும் கிரேக்கத்தின் கூட்டணி அரசாங்கத்தை, இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாஜி ஆக்கிரமிப்பில் Georgios Tsolakoglou தலைமையின் கீழ் இருந்த கைப்பாவை அரசாங்கத்துடன் ஒப்பிட்டிருந்தார்.
“உணவிற்கு குப்பைகளைக் கிளறி வாழ்தல்” என்று முடிவதை விட கௌரவத்துடன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தயார் என்று கூறிய வகையில் குறிப்பில் எழுதியிருந்த அவர் இளைஞர்களை எழுச்சி செய்து “1945ல் இத்தாலியர்கள் முசோலினியை தூக்கிலிட்டது போல் நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்களை சின்டகமாக சதுக்கத்தில் தூக்கிலிடுமாறு” அழைப்பு விடுத்திருந்தார்.
கிறிஸ்ரோலாஸ் தன்னையே சுட்டுக் கொன்ற பைன் மரக்கீழ்ப்ப்பகுதி ஓர் வழிபாட்டுத்தலமாக மாறிவிட்டது; அந்த இடத்தைச் சுற்றிலும் மெழுகுவர்த்திகளும், மலர்களும் நிறைந்துள்ளன; “கடன் கொடுத்தவர்களுடைய ஆட்சிக்குழு வீழ்க” என்ற குறிப்புக்களும் நிறைய இருந்தன. புதன்மாலை தன்னியல்பாக எழுந்த எதிர்ப்புக்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்; தற்கொலையை கேட்டுக் கூடிய இவர்கள் மிருகத்தனமாக கலகப் பிரிவுப் பொலிசாரால் கண்ணீர்ப்புகை மற்றும் கையெறி குண்டுகள் மூலம் தாக்கப்பட்டனர்.
சனிக்கிழமை(08.04.2012) நினைவுநாளை அடுத்து, எதிர்ப்பாளர்கள் குழு ஒன்று ஒரு பொலிஸ்காரரைத் தாக்கியது; அவரிடம் இருந்து குண்டு துளைக்காத கவசம் மற்றவற்றை எடுத்துச் சதுக்கத்தில் தீயிலிட்டது.
தன்னுடைய பாராட்டுரையில் கிறிஸ்ரோலாஸின் 43 வயது மகள் எம்மி தன்னுடைய தந்தையாரின் தற்கொலை “ஆழ்ந்த அரசியல் தன்மையுடையது” என விவரித்தார்.
“என்னுடைய தந்தையார் விட்டுச் சென்றுள்ள குறிப்பு, தவறான பொருள்விளக்கத்திற்கு இடம்விட்டு வைக்கவில்லை. அவருடைய முழு வாழ்வும் ஒரு இடது போராளியாகவும், தன்னலமற்ற நோக்கம் உடையவராகவும் விளங்கியது. இறுதிச் செயலும் ஒரு முழு நனவான அரசியல் செயல்தான், அவர் நம்பி வாழ்ந்த முழுக் கோட்பாடுகளுடன் முற்றிலும் இயைந்தது” என்று அவர் கூறினார்.
“”I believe that young people with no future will one day take up arms and hang the traitors of this country at Syntagma square, just like the Italians did to Mussolini in 1945.”