Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“உள்ளுர் இலக்கியமும் உலக இலக்கியமும்” – சி. சிவசேகரம் : பௌர்ணமி நாள் ஒன்றுகூடல்!

Mother_child_720 தேசிய கலை இலக்கியப் பேரவை மாதம் தோறும் பௌர்ணமி நாள் ஒன்றுகூடல் நிகழ்வை நடாத்திவருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இம்மாத நிகழ்வது எதிர்வரும் பௌர்ணமி தினமான நவம்பர் மாதம் இரண்டாம் திகதி (02 – 11 – 2009) மாலை ஐந்து மணிக்கு தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைமைப் பணிமனையில் இடம்பெறும்.

இந்த ஒன்று கூடலில் “உள்ளூர் இலக்கியமும் உலக இலக்கியமும்” என்ற தலைப்பில் சி. சிவசேகரம் உரையாற்றுவார். அதை தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறும்.

நிகழ்ச்சி நிரல்

தொடக்கவுரை: சோ. தேவராஜா
உரை: சி. சிவசேகரம் (உள்ளுர் இலக்கியமும் உலக இலக்கியமும்)
கலந்துரையாடல்

தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைமைப் பணிமனை முகவரி இல 571/15, காலி வீதி, கொழும்பு 06 இல் அமைந்துள்ளது. (Roxy திரைஅரங்குக்கு முன்னால், Cherry Fish கடையை அண்டிய ஒழுங்கையின் உள்). இந்நிகழ்ச்சியை தேசிய கலை இலக்கியப் பேரவையின் கொழும்புப் பிரதேசப் பேரவை ஒழுங்கு செய்துள்ளது.

உங்களையும் கலந்து கொள்ளும்படி பணிவன்புடன் அழைக்கிறோம்!

– தேசிய கலை இலக்கியப் பேரவை –
571/15, காலி வீதி,
கொழும்பு 06

Exit mobile version