Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நாம் தமிழர் கட்சியின் உறுதிமொழி – இந்திய ஒருமைப்பாடு

ஈழத் தமிழர்களின் காவலர்கள் எனத் தம்மைப் பிரகடன்ப்படுத்திக்கொள்ளும் பெரும்பாலானவர்கள் நயவஞ்சகத் தனமான சந்தர்ப்பவாதிகள் என மக்கள் இப்போது உணர ஆரம்பித்துவிட்டார்கள். சாதி வெறியர்கள், அமரிக்க மற்றும் இந்திய ஏகபோகங்களின் அடிவருடிகள், ஒடுக்கப்பட்டவர்களின் எதிரிகள் என்று ஒரு ஏமாற்றுக் கும்பலின் தமது சொந்த நலன்களுக்காக ஈழத்தமிழர் அவலத்தைப் பாவித்துக் கொள்கிறது. இவர்களில் பெரும் பகுதியானோர் தமிழ் நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் நிலை கொண்டுள்ளனர். இதன் மறுபகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட மேட்டுக்குடித் தமிழர்களாக கொழும்பை மையமாகக் கொண்டு இயங்குகின்றனர். மகிந்த அரச பாசிசத்திற்கு நேரடியாகத் துணைபோவோரும் இவர்களும் ஏதாவது ஒரு புள்ளியில் ஒன்று படுகின்றனர்.மக்களை அதீதமாக உணர்ச்சியூட்டி அதன் வெப்பத்தில் குளிர்காயும் இந்த அரசியல் வாதிகளுள் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த சீமானும் ஒருவர். சீமானின் நாம்தகிழர் கட்சியின் கொள்கைப் பிரகடனம் தமிழ் நாட்டில் ஜெயலலிதாவின் ஊடாக வலுவடையும் பார்ப்பனீய பாசிசத்திற்கு ஆதரவான பல கூறுகளைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சீமானின் கட்சியில் சேருகின்றவர்கள் ஒரு உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.இலங்கையில் இனப்படுகொலை நிகழ்த்திய இந்திய மேலாதிக்க வாதத்தை ஆதரிக்கும் அந்த உறுதிமொழிப் பிரகடனம் இது தான்: “நாட்டின் அரசியல் சட்டத்திற்கு உண்மையாக இருப்பதுடன், சமனியம் (சோசலிசம்), மதச்சார்பின்மை, குடிநாயகம் ஆகிய கொள்கைகளின்பால் உண்மையான நம்பிக்கைக் கொண்டு, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலைநிறுத்தி, வலிமைப்படுத்தக் கட்சி உறுதி அளிக்கிறது.”

இந்திய உளவுத்துறையின் உறுதி மொழிப்பிரகடனம் போன்ற இது ஈழத் தமிழர் பெயரால் நிறைவேற்றப்படுகின்றது.

Exit mobile version