உலகின் ஐந்தாவது உயரமான கோபுரமாக அதனை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன் நாமலின் திருமண நாளன்றே அக்கோபுரத்தை திறந்து வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
“லோட்டஸ் டவர்” என்று பெயரிடப்படவுள்ள குறித்த கோபுரத்தை நிர்மாணிப்பதற்கு பேலியாகொடையில் பதினான்கு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோபுரம் முற்றுமுழுதாக ஆடம்பர ஹோட்டலாக செயற்படவுள்ளதுடன், அதன் உச்சியில் வைபவங்களை நடாத்துவதற்கான சுழலும் மண்டபம் ஒன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளது. அம்மண்டபத்தில் குறைந்தது ஐயாயிரம் பேர் ஒரே நேரத்தில் அமரக் கூடியதாக இருக்கும் என்று தெரிய வருகின்றது.
உலகில் இவ்வாறான சுழலும் கோபுரங்கள் மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுகின்றன.
இன்னும் இரண்டொரு வருடங்களில் நடைபெறவுள்ள நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுடன் குறித்த ஹோட்டல் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு மக்களின் வரிப்பணத்தை தமது குடும்பத்தின் ஆடம்பர விடயங்களுக்காகச் செலவிடுவதில் முனைப்புக் காட்டி வரும் ஜனாதிபதி தனது மகனின் திருமண வைபவத்திற்காக நாட்டு மக்களின் பணத்தைக் கொண்டு புதியதொரு ஹோட்டல் ஒன்றையே நிர்மாணிக்கவுள்ளது தான் சர்வாதிகாரத்தின் உச்சமாக கருதப்படுகின்றது.
உலகின் பல சர்வாதிகாரிகள் இவ்வாறாக தலைகால் புரியாமல் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்து விட்டு கடைசியல் இருந்த இடத்துக்கும் சொல்லாமல் ஓட்டம் பிடித்த வரலாறுகளை உலகம் நிறையவே கண்டுள்ளது. அந்த வகையில் மஹிந்தவும் மக்களால் விரட்டப்படும் காலத்தை அவராகவே வலிந்து அழைத்துக் கொண்டிருக்கின்றார்.