Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நான் பிரபாகரனைக் காட்டிக்கொடுக்கவில்லை : சொல்கையிம்

velupillai-prabhakaranசமூக இணையம் என்று அழைக்கப்படும் டுவிட்டரில் நடைபெற்ற உரையாடல் ஒன்றில் நோர்வேயில் இலங்கைக்கான சமாதானத் தூதராகப் பணியாற்றிய எரிக் சொல்கையின் உரையாடல் ஒன்றின் போது பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க ஆகியோர் இலங்கை அரசாலேயே படுகொலை செய்யப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள்தான் நீலன் திருச்செல்வத்தையும் லக்ஸ்மன் கதிர்காமரையும் கொன்றனர். பிரபாகரனைப் பற்றிய தகவலை ராணுவத்துக்குக் கொடுத்து அவரை கொலை செய்ய நானே காரணம் என்றும்கூட தமிழ் தீவிரவாதிகள் சொல்லுகின்றனர். விரவாதிகளுடனான அனைத்து உரையாடல்களையும் நான் நிறுத்திவிட்டேன்.. நீங்கள் இப்படி பொய்யான தகவல்களை சொன்னால் உங்களுடனான உரையாடல்களையும் நிறுத்திவிடுவேன் .

கூட்டாட்சி முறை என்பது சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ள அறிவார்ந்த வழி. இதுதான் இந்தியா, ரஷியா, ஜெர்மனி, ஸ்பெயின் ,சுவிஸ் என பல நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது இலங்கையிலும் அதுவே சிறந்தது என சொல்கையின் தெரிவித்தார்.
ஏகாதிபத்தியங்களின் அனுசரணை அரசான நோர்வேயும் சொல்கையிமும் தமது வர்க்க எடுபடிகளுடன் இணைந்தெ செயற்படும் என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள் தேவையற்றது.

Exit mobile version