Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நான் செய்த குற்றமென்ன : இலங்கை ஜனாதிபதி

சர்வதேசப் போர் விதி முறைகளை மதிக்காத குற்றத்திற்காகப் போர்க்குற்றவாளியாகவும், இனப்படுகொலை மேற்கொண்ட குற்றத்திற்காக ஜனநாயக வாதிகளாலும், மனிதாபிமானிகளாலும் வெறுக்கப்படும் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச தான் குற்றமேது மேற்கொள்ளவில்லை என மறுபடி கூறியுள்ளார். 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாபவிப் பொது மக்களைப் படுகொலை செய்த குற்றச் செயலை பயங்கரவாத ஒழிப்பு எனப் பெயரிடும் மகிந்த ராஜபச்க்ச தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“அமெரிக்க செனற் சபையில் எம்மை யுத்தக்குற்ற நீதிமன்றிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென பிரேரணை கொண்டு வந்துள்ளனர். நான் செய்த குற்றம் என்ன? புலிப் பயங்கரவாதத்தை ஒழித்தது குற்றமா? துண்டாடப்பட்டிருந்த நாட்டை ஒன்றிணைத்தது தவறா? நாட்டில் சமத்துவத்தையும் அச்சம் பீதியின்றி வாழக்கூடிய சூழலையும் ஏற்படுத்தியது தவறா?
இந்த விடயங்கள் தொடர்பில் இவர்கள் இன்று பாரிய சத்தமிடுகின்றனர். மனித உரிமைகள் மீறப்பட்டதாம். யாருடைய மனித உரிமை மீறப்பட்டது? எங்களுடைய மனித உரிமை மீறப்பட்டுள்ளது.
சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கிலாந்து சென்று புலிகளுடன் சேர்ந்து விமான நிலையத்திற்குள் என்னால் செல்ல முடியாது போனது. இப்படி சிலர் இன்று முயற்சிக்கின்றனர்.” என்று கூறினார்.

Exit mobile version