வத்திக்கானின் இழந்துவரும் செல்வாக்கைத் தூக்கி நிறுத்த பாப்பரசர் பேச்சளவிலேனும் ஏழைகளுக்காகப் சில கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். கம்யூனிசம் என்பது மதத்தினுள் மக்களைக் கட்டிவைத்திருப்பதல்ல. ஒருசிலரின் உடைமையாக்கப்ப்ட்டுள்ள உற்பத்தியையும் உழைக்கும் உழைக்கும் மக்களின் உடமையாக்குவதாகும். இன்று ஒரு சில பல்தேசிய முதலாளிகள் உலகம் முழுவடும் உள்ள உற்பத்தி சாதனங்களைத் தமது உடமையாக்கிக்கொள்வதற்காகப் போர்களையும் யுத்தங்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். ஆதலால் பாப்பரசர் அவர் கூறுவது போன்றே அவர் கம்யூனிஸ்ட் அல்ல.
நான் கம்யூனிஸ்ட் அல்ல – வறிய மக்கள் குறித்து கவனமெடுக்கிறேன் அவ்வளவே: பாப்பரசர் பிரான்சிஸ்
